
உங்கள் கனவில் வெள்ளை நிற பசு வந்தால் வாழ்வில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
கன்று போட்ட பசுவைக் கனவில் கனவில் காண்பது செல்வ வளம் ஏற்படப்போவதை குறிக்கும்.
ஆனால் பசு குட்டி போடுவது போல உங்கள் கனவில் வந்தால் துன்பங்கள் ஏற்படும்.
உங்கள் கனவில் நீங்கள் ஒரு பசுவை வாங்குவது போல் கண்டால் அத்தகைய கனவு ஒருவருடன் நீங்கள் வைத்து கொள்ளும் ஒரு நல்ல நட்பை குறிக்கும்.
இந்த நட்பு எதிர்காலத்தில் உங்களுக்கு கணிசமான வருமானத்திற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கும். இது திருமண உறுதிப்பாட்டில் முடிவடையும் ஒரு நட்பை கூட குறிக்கலாம்.
இந்த கனவு திருமணமான தம்பதியினருக்கும் ஒரு நல்ல அறிகுறியாகும். இது குடும்பத்தில் உள்ள பேரின்பத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கிறது.
உங்கள் கனவில் தெரியாத ஒரு நபர் பசுவுக்கு பால் கறப்பதை போல் கண்டால் அத்தகைய கனவு ஒரு கிராமத்தில் எளிமையான வாழ்க்கை வாழ நீங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதை குறிக்கும். அதாவது இந்த கனவு நகர்ப்புற வாழ்க்கையின் வம்புகளிலிருந்து விலகி கிராமப்புறங்களில் செல்ல விரும்புவதை குறிக்கும்.
உங்கள் கனவில் மாடு தொலைந்து போவது போல வந்தால் அத்தகைய கனவு எதிர்காலத்தில் நீங்கள் சந்திக்கவிருக்கும் சிரமங்களையும் சிக்கல்களையும் முன்னறிவிக்கும். நீங்கள் சந்திக்கும் இந்த தடைகளை சமாளிக்க நிறைய பொறுமை வேண்டும். அப்படி பொறுமையோடு இருந்தால் நீங்கள் இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் கனவில் மாடு விற்பது போல வந்தால், அத்தகைய கனவு அநேகமாக ஒரு மோசமான அறிகுறியாகும், இது இழப்புகளைக் குறிக்கிறது. நீங்கள் முன்பு எடுத்த மோசமான வணிக முடிவுகளின் காரணமாக, எதிர்காலத்தில் பெரும் தொகையை இழப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த கனவு உங்களுக்கு நிறைய பணங்கள் செலவாகும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் இருமுறை யோசிக்க எச்சரிக்கிறது. உங்களுக்கு பிறரிடம் நம்பிக்கை இருந்தால் உங்கள் , நம்பகமானவர்களிடம் ஆலோசனை கேட்பது கூட நல்ல யோசனையாக இருக்கும்.
உங்கள் கனவில் காளை மாடு கனவில் வந்தால் துன்பங்கள் வரும். காளை மாடு நம்மை துரத்துவது போல கனவில் வந்தால் மரண பயம் ஏற்படும். காளை மாடு நம்மை பார்த்து சீறுவது போல் கனவு கண்டால் பிறரின் மேல் நாம் கொண்ட அதிகாரம் குறையும்.
உங்கள் கனவில் காளை முட்டுவது போல கனவு வந்தால் மருத்துவ செலவு ஏற்படலாம். காளை உங்களை மிதிப்பது போல் கனவு வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குட்டி காளை கனவில் வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
உங்கள் கனவில் எருமையை கண்டால் அது மோசமான அறிகுறியாகும். எருமை முட்டுவது போல் கனவு வந்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே வாகனங்களில் செல்லும் போது மிக கவனமாக செல்லுங்கள்.
உங்கள் வீட்டில் எருமை நுழைவது போல கனவு வந்தால் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உங்களை நோக்கி எருமை வருவது போல் கனவு வந்தால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. ஆனால், சிறிது நாட்களிலேயே இந்த பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
தோன்றும்…..