ஏப்ரல் 23, 2021, 7:08 காலை வெள்ளிக்கிழமை
More

  ஆர்.எஸ்.எஸ் பிரசாரக்கை அடித்த பாதிரி! வீட்டுக்கே சென்று உலுக்கிய கோபால்ஜி!

  ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் இளைஞனை அந்த கிராமத்தில் உள்ள பாதிரி அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கு உங்கள் ஸ்டேஷனில்தான் உள்ளது

  WhatsApp-Image-2020-09-30-at-19 16 58-3
  WhatsApp-Image-2020-09-30-at-19 16 58-3

  சட்டையை பிடித்து உலுக்குவதுபோல் கேள்வி கேட்டார்… கோபால்ஜி.. என்ன தைரியம்!

  (சம்பவம் என்பதால் நீள் பதிவு தான்… படித்து பகிருங்கள்..) சுமார் பத்தாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்….

  கோபால்ஜி மதுரையில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார். திருமணம், காலை 10 மணிக்குள் முடிந்துவிட்டது. இரவு ரயிலில் திரும்ப வேண்டும்.

  சாப்பிட்டு முடித்து ரெஸ்ட் எடுத்திருக்கலாம்… ஆனால், கோபால்ஜியின் மனதை ஒரு விஷயம் உறுத்திக்கொண்டிருந்தது ..

  திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் இங்கு வந்திருப்பவர்களில் வக்கில்கள் யார் யார் எனக் கேட்டார்… சிலர் கையை தூக்கினார்கள்..

  இன்று மாலை வரை என்னுடன் இருக்க முடியும் என்பவர்கள் மட்டும் என்னிடம் வாங்க என்றார்..

  கோபால்ஜி கேட்டு தயங்குவார்களா?

  அவரது தீர்க்கமான குரலைக் கேட்டால்.. பயந்த சுபாவம் உள்ளவனுக்கும் வீரம் வந்துவிடுமே…

  கோபால்ஜி சமுதாய காரியத்திற்குத்தான் கூப்பிடுவார் என்பது தெரியுமே..

  வக்கில்கள் வந்தார்கள்.

  சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று வரலாம்.. எல்லோரும் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றார்.

  கோபால்ஜியும் சாப்பிட்டுவிட்டு, அங்கு வந்த இயக்க நண்பர்களின் கார்களில் அந்த வக்கீல்கள் வர ஏற்பாடு செய்யச் சொன்னார்…

  கோபால்ஜியின் படை தயாரானது..

  குறிப்பிட்ட கிராமத்தின் போலீஸ் சரகம் எது எனக் கேட்டார்…

  அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்..

  இன்ஸ்பெக்டரிடம்… “ஐயா! நான் இந்த கிராமத்திற்கு செல்லப்போகிறேன்.. அதற்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?” எனக் கேட்டார்..

  கிராமத்திற்கு போவதற்கு ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள்.. என்ன ஆட்சேபணை..?'' எனக் கேட்டார். . அந்த கிராமத்தின் சேவைக்காக வந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் இளைஞனை அந்த கிராமத்தில் உள்ள பாதிரி அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கு உங்கள் ஸ்டேஷனில்தான் உள்ளது. நான் அந்த பாதிரியை பார்த்து நாலு கேள்வி கேட்கப்போகிறேன்.. உங்களுக்கு ஒன்றும் ஆட்சபேணை இல்லையே?” என்றார்…

  இன்ஸ்பெக்டர்… கூட வக்கில்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் வந்திருப்பதை பார்த்துவிட்டு.. “உங்கள் பாதுகாப்பிற்கு எங்கள் காவலர்களையும் அனுப்புகிறோம்” என்றார்..

  “அது உங்கள் இஷ்டம்” எனக் கூறிவிட்டு…

  நேரடியாக கிராமத்திற்கு பயணமானார்கள்..

  போகும் வழியில் வயலில் வேலை செய்பவர்களைப் பார்த்ததும்.. வண்டியை நிறுத்த சொன்னார்…

  காரிலிருந்து இருந்து கூட்டமாக வருவதை பார்த்த கிராமத்து ஜனங்கள்.. ஓடி வந்தனர்..

  “ஐயா! அம்மா! வணக்கம். உங்களுக்காக சேவை செய்ய ஆள் வந்தா, இப்படித்தான் பாதிரிக்கிட்டே அடிவாங்க விட்டு வேடிக்கைப்பார்ப்பீங்களா? என கேட்டார்…

  எல்லோரும் தலையை குனிந்து நின்றனர்… கசமுச என்று பேசினர்.. அப்போது அது பத்திரிகையிலும் வந்திருந்தது..

  “சரி.. இந்த ஊரில் உள்ள பொது கோயிலுக்கு தயவு செய்து உங்கள் ஊரில் உள்ள அனைத்து இந்துக்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்…” என்று கூறிவிட்டு… மீண்டும் காரில் ஏறி புறப்பட்டார் கோபால்ஜி..

  நேரே பாதிரியின் வீட்டிற்கு சென்றார்..

  காலிங் பெல்லை அடித்தவுடன்.. பாதிரியின் மனைவி வெளியில் வந்து பார்த்தார்கள்…

  இந்துக்களுக்கு அடையாளம் தெரிகிறதோ இல்லையோ கிறிஸ்தவர்களுக்கு கோபால்ஜியை தெரியுமே..

  “ஐயா! வாங்க…” என உள்ளே அழைத்தார் பாதிரியின் மனைவி…

  “நான் உங்க வீட்டிற்கு விருந்தாளியா வரல… உங்கள் கணவர்கிட்டே நியாயம் கேட்க வந்திருக்கேன்..”

  பாதிரி தயங்கியபடியே வெளியே வந்தார்..

  கோபால்ஜி, “நீ நல்லாயிருப்பியா? உனக்கு அந்த பையன் என்ன கெடுதல் செய்தான்…?! உன் வீட்டில் வந்தானா? என்ன தைரியம் இருந்தா அடிப்பே?! கேட்க நாதியில்லையென நினைச்சியா? நீ நாசாமா போயிடுவே..” என ஆவேசமாக பேசினார்…

  பாதிரியின் மனைவி.. “மன்னிச்சுடுங்க ஐயா!” என கெஞ்ச ஆரம்பித்தார்… பாதிரியும் கெஞ்ச ஆரம்பித்தார்..

  “இந்துக்கள் நினைத்தால் நீ உன் குடும்பம் இந்த ஊரில் இருக்க முடியாது… ஒழுங்கா இரு!” எனக் கூறிவிட்டு…

  கோயிலுக்குச் சென்றார்…

  அதற்குள் போலீஸ்… வண்டிகளில் நிறைய பேர் வந்திருப்பதால் ஊர் கூடிவிட்டது..

  கோபால்ஜி, அந்த ஊர் பொதுமக்களிடம்…

  “உங்களுக்கு சேவை செய்ய.. உங்கள் குழந்தைகளுக்கு நல்லது சொல்லிக்கொடுக்க ஆர்.எஸ்.எஸ். ஒரு பையனை அனுப்பினா.. பாதிரி கண்மண்ணு தெரியாம அடிச்சிருக்கான்… நீங்க நியாயம் கேட்கவில்லை… அதற்காகத்தான் நான் வந்தேன்.. கேட்டுவிட்டேன்…

  இப்படி நீங்க இருந்தீங்க… இந்து சமுதாயத்திற்கு வேலை செய்ய யார் வருவார்கள்?!” என ஆதங்கத்தோடு கேட்டார்..

  ஊர் பெரியவர்கள் எழுந்து கோபால்ஜியிடம்..

  “ஐயா எங்களை மன்னிச்சுடுங்க.. இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்..” என உறுதி கூறினர்..

  “இதற்காகத்தான் நான் வந்தேன்.. நமது கோயில், நமது குடும்பம் பாதுகாப்பா இருக்கனும் என்றால் நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும்.. விழிப்புணர்வு இருக்க வேண்டும்..

  பாதிரி அடித்ததை தட்டிக்கேட்காதது தவறு என்று உணர்கிறீர்கள்.. அதுவே எனக்கு ஆறுதல் தருகிறது…
  உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இனி நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள்.. போய் வருகிறேன்” எனக் கூறிவிட்டு…

  அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து, ரயில் ஏறி ஊருக்கு வந்து சேர்ந்தார்…

  அடுத்த நாள் காலை கோபால்ஜியை நான் பார்த்தபோது… அப்பாடா! இப்பதான் எனக்கு மனது நிம்மதியாச்சு… ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலேன்னா
  என்னாயிடப் போவது…என்றார் ..

  என்ன ஜி ஆச்சு…… என்று கேட்டதற்கு மேலே சொன்ன சம்பவத்தை கூறினார்…

  வயதான காலத்திலும் கொஞ்சமும் தயங்காமல்… தட்டிக்கேட்ட கோபால்ஜி…

  இப்போதும் நம் கண் முன்.. தைரியமான…துணிச்சலான… இளைஞனாக நிற்பதை பாருங்கள்…

  என்னைப்போல் நூறு நூறு இராம கோபாலன்கள் வருவார்கள் எனக் கூறியுள்ளார்… அதனை நிரூபிப்போம்..

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »