Home உரத்த சிந்தனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்… இப்போ இதைச் செய்யலாம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்… இப்போ இதைச் செய்யலாம்!

venkatesan-mp-madurai
venkatesan mp madurai

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மே மாதத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.

மதுரையில் சுடுகாட்டில் பிணம் வருவது குறைந்தது. மக்களுக்கு பிற நோய்கள் குறைந்து விட்டதா, மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாததால் மரண எண்ணிக்கை குறைந்தது என்று பொருள் படும் படி அந்த பதிவு இருந்தது.

சிலர் குறிப்பாக மருத்துவர்கள் விளக்கமும் தந்தார்கள், விபத்து மற்றும் கொலை போன்ற காரணங்களால் ஏற்பட்ட மரணம் குறைந்தது உண்மை. மக்கள் வெளியில் சொல்லாமல் இருந்ததும் காவல் கண்காணிப்பு அதிகம் இருந்ததும் காரணம்.

ஆனால் நாட்பட்ட நோய் உடையவர்கள் சிகிச்சை சரியாக எடுத்து கொள்ளாததால் மரணம் சில மாதங்கள் தள்ளி போகலாம், இயற்கை மரணம் முதியவர்களுக்கு கூடுதல் கவனம் இருந்ததால் குறைந்து இருக்கலாம் ஆனால் சில மாதங்கள் கழித்து கணகெடுத்தால் தெரியும் என்று விளக்கம் தந்தார்கள்.

ஊடகங்கள் பார்த்தீர்களா அதிக மரணங்களுக்கு மருத்துவ மனைகள் காரணம், சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் மரணம் குறையும் என்ற வகையில் பேசி எழுதி தள்ளினார்கள்.

இப்பொழுது தொற்று ஆரம்பித்து 8 மாதம் கடந்து விட்டது. இப்பொழுது இந்தக் காலகட்டத்தில் மதுரையில் ஏற்பட்ட மரணம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு உண்மை நிலையை எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் எழுத வேண்டும். மதுரை சுகாதார துறை epidemiologist உதவியை பெறலாம்.

  • டாக்டர் திருநாராயணன் திருமலைஸ்வாமி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version