சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புகைப்படம் அண்ணாத்தே. இப்படத்தில் ரஜினியோடு கீர்த்திசுரேஷ், குஷ்பு,மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதத்திலேயே கொரோனா பரவல் துவங்கி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்காக ரஜினி நேற்று விமானம் மூலம் ஹைதராபாத் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் அவர் விமானம் ஏறுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியானது.
இந்நிலையில், அண்ணாத்தே படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போட்டு தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 25 நாட்கள் அங்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துவிட்டு அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.