
ஆப்பிள் ரசம்
தேவையான பொருட்கள்
சிவப்பு காய்ந்த மிளகாய். —-1
தக்காளி. —– 1
புளி. —-சிறிதளவு
பூண்டு. —— 5 பல்
கடுகு. —– 1/2 ஸ்பூன்
சீரகம். —- 1 ஸ்பூன்
மிளகு. . — 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் —1/4 ஸ்பூன்
சிறிதாக நறுக்கிய ஆப்பிள்—1 கப்
கறிவேப்பிலை. —– சிறிதளவு
பெருங்காயம் —-சிறிதளவு
ஆப்பிள் இரண்டாக வெட்டி பாதி ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
ஆப்பிள் தோலை நீக்கி விட்டு ஆப்பிளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் பூண்டு 5 சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுது உடன் சிறிதாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு புளியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
புளி சாற்றுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் ஒரு தக்காளியை சேர்த்து கொள்ளவும். ஒரு பானில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். அரைத்து வைத்திருந்த ஆப்பிள் மற்றும் மிளகு சீரக விழுது எண்ணெயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பச்சை வாசனை போன பிறகு புளி சாறு சேர்த்து ஒரு கொதி விடவும். ஆப்பிள் ரசம் தாளிக்க ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். சூடான பின் 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு சிவப்பு மிளகாய் சேர்க்கவும். தாளிப்பை ஆப்பிள் ரசத்தில் சேர்த்து பின்பு பரிமாறலாம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான ரசத்தை உண்ணலாம். இப்போது சுவையான எளிமையான ஆப்பிள் ரசம் தயார்.