October 12, 2024, 8:55 AM
27.1 C
Chennai

தெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..!

புதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’..!

லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..!

ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானு ஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ALSO READ:  ஒத்திசைவான தேசத்தை ஒன்றாக இருந்து உருவாக்குவோம்!

ஆதி நடிக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர் பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை. அதை மையப் படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி  இருக்கிறது. இதன் படப் பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது.

விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

Source: Vellithirai News

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் அக்.12 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.12ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...