
வாழைக்காய் – பனீர் புட்டு
தேவையானவை:
பெரிய வாழைக்காய் – ஒன்று,
பனீர் (துருவியது) – கால் கப்,
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
பூண்டு – 3 பல்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வாழைக்காயை தோலுடன் 3 துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, தோலை உரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, வேகவைத்த வாழைக்காயை கேரட் துருவியில் துருவி சேர்த்து மேலும் வதக்கி, துருவிய பனீரையும் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து, நன்கு கலந்துவிடவும்.