ஏப்ரல் 14, 2021, 1:14 காலை புதன்கிழமை
More

  காந்தி மாவட்டத்தின் அஹிம்சா தேன்!

  அந்த நிறுவனம் தயாரிக்கும் தேனின் தரத்திற்கு உத்திரவாதம் தரும் பணியினை செய்யும் கெமிஸ்டான Dr சுனிதா பாலிவால் அவர்களின் பங்கை

  honey - 1

  கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

  தேனீக்கள் மனிதனின் வாழ்விற்கு சப்தமே இல்லாமல் அருமையாய் உதவுகிறது. இவ்வுலகில் இருந்து தேனீக்கள் மறைந்தால், அதிலிருந்து நான்கு வருடங்களில் மனித இனமே அழிந்து விடும் அபாயம் உள்ளதாம்.

  தேனடைகளிலிருந்து தேனை எடுக்கும் போது தேனடையை எரிக்காமலும், அதன் மூலம் தேனீக்களையும் அழிக்காமலும், புதுமையான முறையில் அஹிம்சா தேன் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

  honey - 2

  மஹாராஷ்டிராவில் உள்ள காந்தி மாவட்டம் என்று அழைக்கப் படும் வர்தா மாவட்டத்தில் உள்ள CBeed நிறுவனம்.சேவாக்ராம் நிசர்க தேன் ( Sevagram Nisarga Honey) என்று இதற்கு பெயரிட்டுள்ளனர். CBeed என்னும் நிறுவனத்தில் இயக்குனர் Dr கோபால் பாலிவால் மற்றும் அவரது மனைவியும், அந்த நிறுவனத்தில் கெமிஸ்டாக பணிபுரிபவருமான Dr சுனிதா பாலிவாலும் தேனீக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

  Dr sunitha paliwal in her lab - 3

  Dr சுனிதா பாலிவால், நம்மிடம் பேசும்போது, Dr கோபால் பாலிவால் அவர்களின் வழிகாட்டலுடன் CBeed நிறுவனம், மகாத்மா காந்தியடிகளின் தத்துவங்களில் முக்கியதாய் கருதப்படும் அஹிம்சா வழியைப் பின்பற்றி எடுக்கப்படும் தேன் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இம்முறையை CBeed நிறுவனம் பின்பற்றி வருகிறது. எங்கள் நிறுவனமானத்தின் மூலமாக 27 மாவட்டங்களில் அங்கேயே உள்ள NGO நிறுவனங்களின் உதவியுடன் ஆதிவாசி மக்களுக்கு இம்முறையைப் பயிற்சி தருகிறோம். இதன் மூலம் ஆதிவாசி மக்களுக்கு நிரந்தர வருமானம் கிட்டுகிறது, என்றார்.

  Dr sunitha paliwal in her lab2 - 4

  Dr. சுனிதா பாலிவால் தன் பணி அனுபவத்தைப் பற்றி கூறும்போது,” என் திருமணத்தின் போதே என் கணவரான Dr கோபால் பாலிவால் தேன் சம்பந்தப்பட்ட துறையில் பணியில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து நானும் பணியாற்ற முடிவு செய்தேன்.

  மார்க்கெட்டில் கிடைக்கும் தேன் வகைகளில் செய்யப்படும் கலப்படத்தை அறிந்ததும், சுத்தமான தேனுக்கும், கலப்பட தேனுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம். இதனால் நான்
  Honey Quality Control and Pollen Grain Study என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றேன். இதனால் மக்களுக்கு தரமான தேன் எங்களால் விற்க முடிகிறது,” என்றார்.

  honey - 5

  பலதரப்பட்ட முயற்சிகளின் மூலமாக ஆதிவாசி மக்களுக்கு பயிற்சி அளித்தும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகோலப்படுகிறது, என்றார் Dr சுனிதா பாலிவால். பெண்களும், இளைஞர்களும் உற்சாகத்துடன் தேன் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

  CBeed நிறுவனத்தின் சேவாக்ரம் நிசர்க தேன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மக்களிடம் நல்ல தரத்திற்காக பெயர் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் தயாரிக்கும் தேனின் தரத்திற்கு உத்திரவாதம் தரும் பணியினை செய்யும் கெமிஸ்டான Dr சுனிதா பாலிவால் அவர்களின் பங்கை அனைவரும் பாராட்டுகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  five + three =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »