Home இலக்கியம் நிகழ்ச்சிகள் இந்து முன்னணி பெற்ற விருது!

இந்து முன்னணி பெற்ற விருது!

IMG 20210311 WA0031

விருதை #வீரத்துறவி இராம கோபாலன் அவர்களுக்கும், #பலிதானிகளுக்கும், கடும் பணியாற்றுகின்ற #பொறுப்பாளர்களுக்கும் #சமர்ப்பணம் செய்கிறேன் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனாவில் உள்ள RSS ஜன கல்யாண் அமைப்பு மிகவும் பிரபலமான ஒரு சேவை அமைப்பு.

1972 ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்ச காலத்தில் அமைக்கப்பட்டு இன்று மாநிலம் முழவதும் கல்வி, மருத்துவம், சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலன் உள்ளிட்ட 8 வகையான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதன் பொறுப்பாளர்கள் இயங்கி வருகின்றனர்.

பூனாவில் மட்டுமே மூன்று மிகப்பெரிய இரத்த வங்கிகள் இருக்கின்றன. உலகில் எங்குமே இல்லாத சிறந்த உபகரணங்கள் கொண்டிருப்பது இதன் சிறப்பு (லேப்).

RSS #ஜனகல்யாண் சமிதி பாரத நாடு முழுவதும் இது போன்ற சேவைப் பணிகளில் , சமுதாய விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடவோர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு அரிய செயல்களை செய்தவர்களுக்கு விருது வழங்கியுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு- 2021- இரண்டு விருதுகளை வழங்கியது.

தமிழகத்தில் சமுதாய விழிப்புணர்வு பணியில் கடந்த 40 ஆண்டுகளாக இணையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்ற அமைப்பு என்ற வகையில் இந்துமுன்னணி பேரியக்கத்திற்கு விருது வழங்கி கௌரவித்தது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

மற்றொரு ‌விருதானது சுவாமி சத்யநாராயணா கோவில் மட்டுமில்லாது நாடு நெடுகிலும் பிரம்மாண்டமான பல கோவில்களை வடிவமைப்பாளரும் (ஆர்கிடெக்ட்), தற்போது அயோத்தியில் அமையவுள்ள கோவிலின் வடிவமைப்பாளருமான திரு.சோமபுரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜனகல்யாண் சமிதி அமைப்பின் மாநிலத் தலைவர்,
மகாராஷ்டிரா RSS ன் மாநிலத் தலைவர்,
ராமானந்த சாகர் அவர்கள் இயக்கிய ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நாடகங்களுக்கு செட் வடிவமைப்பு செய்தவரும், மற்றும் மும்பை சினிமா துறையின் தலைசிறந்த வடிவமைப்பாளருமான (ஷூட்டிங் செட்) திரு. நிதின் தேசாய் அவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் RSS அகில பாரத செயற்குழு உறுப்பினர்- மூத்த பிரச்சாரக் ஸ்ரீ.சுஹாஸ்ராவ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version