ஏப்ரல் 20, 2021, 2:51 மணி செவ்வாய்க்கிழமை
More

  இது தெரியாம போச்சே..! நலன் பல தரும் நாட்டு சர்க்கரை!

  jaggery powder 1 - 1

  பொதுவாக வெல்லத்தில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகமிருக்கிறது ஆனால் அதனினும் அதிக சத்து நாட்டுச் சர்க்கரையில் இருக்கிறது.

  மன்னர்கள் காலத்திலேயே மக்கள் இனிப்புகளை அதிகம்விரும்பி எடுத்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. அதோடு அந்த இனிப்புகள் தயாரிக்க பனை வெல்லம்,தேன் முதலானவற்றைப் பயன்படுத்தியாகவும் குறிப்பிடுகிறது. அதுவரைஆரோக்யம் காக்கப்பட்ட நம் மூதாதையர்களின் காலத் துக்குப் பிறகு இடையில் வந்த பள பள வெள்ளை சர்க்கரை ஆரோக்யத்தை சீரழித்துவிட்டது.

  கரும்பைச் சாறாக்கி பாகு காய்ச்சும் போது, அவை குறிப்பிட்ட கொதிநிலையை அடையும் போது வெல்லம் அச்சு மற்றும் உருண்டை வடிவில் மாற்றம் அடைந்து பிறகு பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே நாட்டுச்சர்க்கரை எனப்படும் கரும்பு சர்க்கரை.

  இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்கிறது. இனிப்பு உணவுகள் குடல் இயக்கங்க ளின் பணியை குறைத்து மலச்சிக்கலை உண்டாக்கும். ஆனால் நாட்டு சர்க்கரை குடலுக்கு வலுவூட்டி குடல் இயக்கங்களை துரிதப்படுத்தும். இத னால் மலச்சிக்கல் பிரச்னையும் நீங்கிவிடும்.

  நாட்டு சர்க்கரையில் பல வித நலன்கள் இருக்கிறது. இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. இது உடல் வலிமைக்கு மிகவும் உதவும். நாட்டு சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், செலினியம், இரும்புசத்து போன்றவை நிறைந்துள்ளது
  இயற்கையாகவே இதில் எண்ணற்ற தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கும். அத்துடன், எந்த வித பாதிப்பையும் இது உடலுக்கு தராது.

  மாதவிடாய் வலிகளுக்கு…

  பெண்களின் மிக கொடுமையான நாட்களாக கருதப்படும் இந்த மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி உண்மையில் மோசமானதுதான். இந்த வலியை போக்கும் மருந்தாக நாட்டு சர்க்கரை செயல்படும். மேலும், கர்ப்பப்பையின் தசைகளை இவை தளர்த்தி மாதவிடாய் வலியை குறைத்து விடும்.
  உடல் எடை குறைக்க…

  தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடிவிட்டதே என வருத்தப்படுபவரா நீங்கள்..? இனி இந்த கவலைக்கு தீர்வை தருகிறது நாட்டு சர்க்கரை. இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறது.. எனவே, வெள்ளை சர்க்கரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தினால் உடல் எடை குறைய அதிகம் உதவும்.

  கர்ப்பிணிகளின் நலன் காக்க

  குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பிணிகள் உடல் அளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இதனை அவர்கள் சரி செய்ய பல வித வழிகளை கையாண்டும் பலன் பெற்றிருக்க மாட்டார்கள். உடனடியாக பழைய நிலைக்கே திரும்ப நாட்டு சர்க்கரை பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  ஆஸ்துமா பிரச்சினைக்கு

  இன்று பலரும் மூச்சு திணறல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு ஒரு அருமையான தீர்வாக இந்த நாட்டு சர்க்கரை இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி வந்தால் ஆஸ்துமா பிரச்சினை குணமடையும். மேலும், உடலுக்கு அதிக வலிமையையும் கிடைக்கும்.

  அஜீரண கோளாறுகளுக்கு

  செரிமான பிரச்சினையால் இன்று பலர் கஷ்டப்படுகின்றனர். இனி நாட்டு சர்க்கரையை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் இந்த ஜீரண கோளாறுகள் விரைவிலே குணமாகும். அஜீரண கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு குடியுங்கள்

  புத்துணர்வூட்டி

  தினமும் சோர்வாக உணர்கிறீர்களா..? இனி இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு சர்க்கரை பயன்படும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் பலவித நன்மைகள் கிடைக்கும். இவை சோர்வாக உள்ள உடல் செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.

  சளி தொல்லைக்கு

  பருவ காலங்களில் சளி தொல்லையால் பலர் பாதிக்கப்படுவர். இதனை சரி செய்ய நாட்டு சர்க்கரை உள்ளது. இவை சளி, இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றை உடனடியாகவே குணமாக்கும். சளிக்கும் சிறிது ஐஜினி மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.

  சரும அழகிற்கு

  இதில் வைட்டமின் பி அதிகம் இருப்பதால் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை முற்றிலுமாக இது போக்கும். மேலும், இளமையான சருமத்தை தந்து செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கும்.

  இனிப்பு கலந்த நொறுக்குத்தீனிகள் செய்யும் போதும் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவது நல்லது. ருசியில் மாற்றம் இருக்காது. நிறத்தில் சற்றே மாறுபடும், நாட்டுச் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இனிப்புகளை குழந்தைகளுக்கு பழக்கினால் உடல் வலிமை அதிகரித்து சத்து குறைபாடின்றி வளர்வார்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »