ஏப்ரல் 20, 2021, 8:41 காலை செவ்வாய்க்கிழமை
More

  மாதவிடாயில் தாங்க முடியாத வயிற்று வலியா? எளிய வழிகள்!

  woman 1 - 1

  மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, ஆயத்த, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த பருப்பு வகைகள், கால்சியம் சத்துள்ள கேழ்வரகு, மீன், முட்டை, கீரை, புரோகோலி, வைட்டமின் சி சத்துள்ள காய்கறி மற்றும் பழங்கள், சோர்வைப் போக்க இரும்புச் சத்துள்ள உணவுகள், உடல்சூட்டைக் குறைக்க இளநீர், நீர்மோர், வெந்தயம், வெள்ளரி, தேவையான தண்ணீர், வெண்ணெய், மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம்.

  மேலும், இந்த நாட்களில் எடை குறையும் என்பதால், அதை ஈடுகட்ட புரதம் நிறைந்த பருப்பு வகைகளும், சர்க்கரைக்குப் பதிலாகத் தேனையும் சாப்பிடலாம்.

  இஞ்சி டீ : இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்துக் குடிப்பதால் அடி வயிற்று வலி குறையும். அதேபோல் உடல் வலியும் குறையும். புத்துணர்ச்சியாக இருக்கும். இது மாதவிடாய் தல்லிப்போதலையும் தடுக்கும்.

  அடிவயிற்றில் ஹீட்டிங் பேட் அல்லது மண்ணை சூடு படுத்தி துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் அடிவயிற்றுவலி குறையும். தசைகள் இலகுவாகும். தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் காட்டன் துணியை முக்கி பிழிந்து அடி வயிற்றில் வைத்துக் கொண்டு படுத்தாலும் வலி குறையும்.

  பட்டை டீ : அரை அல்லது கால் இஞ்சு பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் அடி வயிற்று வலிக் குறையும். அதன் ருசி அத்தனை நன்றாக இல்லை என்றாலும் குடித்தால் பலன் அதிகம்.

  பப்பாளி : பப்பாளியை மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே உண்டு வந்தால் கர்பப்பை வலுபெற்று அதன் வேலையைச் சிறப்பாகச் செய்யும். இரத்தப்போக்கும் சீராகும். வயிற்றுவலியும் குறைவாகும்.

  ஆளி விதை : ஆளி விதையில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. இது கர்பப்பை தடையில்லாமல் வேலை செய்ய உதவுகிறது. கருவுறுதல் பிரச்னை இருந்தாலும் சரி செய்கிறது. இதை தினமும் ஒரு மேசைக்கரண்டி உண்டு வந்தால் வயிறு இறுக்கிப்பிடித்தல், வலி போன்ற பிரச்னைகள் இருக்காது

  வெந்தையம் : வெந்தையத்தை வெறும் வயிற்றில் உண்பதால் வயிறு இறுக்கிப்பிடித்தல் குறையும். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து பேஸ்டாக்கி ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

  சோம்பு : இந்தியா மசாலா வகைகளில் முக்கிய பொருள். இது உணவுக்கு மட்டுமல்ல. நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. இதை அரைத்து வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

  வெந்தய நீர்
  வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால், மாதவிடாய் மூலம் ஏற்படும் இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகி, வலிகள் குறைந்து விடும்.

  இஞ்சி கருமிளகு தேநீர்
  சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் இஞ்சியை தட்டி போட வேண்டும்.

  பின் அதை வடிகட்டி அதில் சிறிதளவு மிளகுப் பொடியை கலந்து குடிக்க வேண்டும். இதனால் வயிற்று வலி குறைந்து, உடல் புத்துணர்வாக இருக்கும்.

  நல்லெண்ணெய் மசாஜ்
  நல்லெண்ணெயை சூடுபடுத்தி, மிதமான சூட்டில் அடிவயிற்றில் மசாஜ் போல செய்து தேய்த்தால் கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியைத் தரும்.

  இதனால் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி குறையும்.

  சீரகம்
  சீரகத்தை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

  பின் ஆறியது அதை வடிகட்டி குடித்தால், மாதவிடாயின் போது வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகிவிடும்.

  சீமை சாமந்தி தேநீர்
  சீமை சாமந்தி ஒரு வலி நிவாரணியாக செயல்படும் மூளிகையாகும்.

  எனவே இந்த சீமை சாமந்தியை தேநீர் வைத்து குடித்தால், கர்ப்பப்பையை தளர்வடையச் செய்து புரோஸ்டா கிளாண்டின் சுரப்பை குறைக்கிறது. இதனால் வயிற்று வலியும் குறைந்து விடுகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »