
மசாலா தர்பூசணி ஜூஸ்
தேவையான பொருட்கள்:
தர்பூசணி – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 சிட்டிகை
சாட் மசாலா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் சீரகத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் அதனை குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் தர்பூசணியை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சீரகப் பொடி, மிளகாய் தூள், உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து ஒருமுறை அடித்து, பின் அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சுவையான மசாலா தர்பூசணி ஜூஸ் ரெடி!