Home நலவாழ்வு ராஜாவாய் ஜொலிக்க.. ரோஜா குல்கந்து!

ராஜாவாய் ஜொலிக்க.. ரோஜா குல்கந்து!

rose kulkand
rose kulkand

ரோஜா செடியில் பூக்கும் ரோஜா மலரிலிருந்து செய்யப்படும் ஒரு மருத்துவ குணமிக்க உணவுப்பொருள் தான் ரோஜா குல்கந்து”.

குல்கந்து, பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகு ஆயுர்வேத மருந்து ஆகும். இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கோடைகாலம் தொடங்கினாலே போதும் அதிகபடியான வெப்பநிலை காரணமாக நாம் நிறைய சுகாதார சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதிக வியர்வை, வேர்க்குரு, உஷ்னம், உடல் சோர்வு, சரும பிரச்சனை என பல உள்ளன. இருப்பினும், இந்த கோடைகாலத்தில் வெப்பத்தை எவ்வாறு வெல்வது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்களுக்கு குல்கந்து ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். குல்கந்து என்பது பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகுந்த ஆயுர்வேத மருந்து என்று கூறப்படுகிறது.

இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தினசரி குல்கந்து சாப்பிடுவதால் அவை வெப்பத்தை தணிக்க உதவும்.

பன்னீர் ரோஜாக்களின் இதழ்களை தனியாக பிரித்தெடுத்து அதனை நனவு கழுவி உலர வைக்க வேண்டும். பிறகு ஒரு பெரிய கற்கண்டு மற்றும் உலர வைத்த ரோஜா இதழ்கள் இரண்டையும் நன்கு இடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டுமானால் இதனுடன் சிறிது கசகசா மற்றும் வெள்ளரி விதைகளை சேர்த்து இடித்துக்கொள்ளலாம். இப்பொது ஒரு கண்ணாடி குடுவை எடுத்து, அதில் இடித்து வைக்கப்பட்ட ரோஜா பேஸ்டை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த ஜாடியை சுமார் ஒரு வாரத்திற்கு வெயிலில் வைக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்குள் உங்களது ரோஜா குல்கந்து தயாராகிவிடும். இதனை தினமும் நீங்கள் சாப்பிடும் போது சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடலாம்.

முதலில் ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து, அதனை குடிக்க வேண்டும். அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிட வேண்டும்.

அடுத்து, அமிலத்தன்மை மற்றும் இதுதொடர்பான பிற பிரச்சினைகள் உள்ளவர்கள் பாலில் குல்கந்துவை சேர்த்து உட்கொள்ளலாம். சிறிது குளிர்ந்த பால் எடுத்து, ஒரு டீஸ்பூன் குல்கண்ட் சேர்த்து பகிருங்கள்.

இல்லையெனில் குல்கந்துவை வெறுமனே கூட சாப்பிடலாம். அல்லது வெத்தலையில் வைத்து மடித்து அதனை சாப்பிடலாம்.

அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, உடலின் நாற்றங்கள், தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

எளிதில் தயாரிக்கப்படும் இது சிறந்த ஆயுர்வேத மருந்துகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இரவு தூங்கும் முன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

அதிக பிரச்சனைகள் இருக்கும் பாசத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம். ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கல்

குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் உள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது.

மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்தை சாப்பிடலாம்.

உடல் துர்நாற்றம்

உடலில் அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கும், மாமிசம் உணவுகள் அதிகம் சாப்பிடும் நபர்களுக்கும் உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். உடல் துர்நாற்றம் போக்க குல்கந்து மிகவும் உதவியாக இருக்கும்.

அது வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. எனவே கோடை களங்களில் காலங்களில் ரோஜா குல்கந்து அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வாய்ப்புண்

உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் பலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறன.

இதற்கு மருந்தாக ரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட ரோஜா குல்கந்து சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.

தோல்

இது தோல் எரிச்சலை கட்டுப்படுத்தி அதன் அறிகுறியைக் குறைக்க உதவுகிறது. மேலும் பருக்கள், கறைகள் போன்ற தோற்றத்தை சரிசெய்கிறது.
இளமை தோற்றம்

இளமை தோற்றம்

அனைவருக்குமே எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கத்தான் செய்கிறது.

இதற்காக விலையுர்ந்த பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட ரோஜா குல்கந்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

முகப்பரு, கொப்பளங்கள்

தீக்காயங்கள் ஏற்படுவதால் ஏற்படும் கொப்புளங்களை சீக்கிரத்தில் குணமாக்கவும், முகப்பருக்கள் ஏற்படுவதை குறைக்கவும் தினமும் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் கொப்பளங்கள் விரைவில் குணமாகும்.
முகத்தில் பருக்கள் ஏற்படுவது குறையும். பருக்களால் ஏற்பட்ட கருந்தழும்புகள் மறையும்.

மயக்கம்

சிலருக்கு வெளியில் செல்லும் போது மயக்கம் ஏற்படும், அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் உடலின் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லாமல் சுணங்குவதால் இத்தகைய மயக்க நிலை ஏற்படுகிறது.

இப்படிபட்டவர்கள் வெளியே செல்லும் போது சிறிது குல்கந்தை சாப்பிட்டு செல்வதால் மயக்க நிலை ஏற்படாமல் தடுக்க முடியும்.

ஆண்மை குறைபாடு

உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கும், வெப்பம் நிறைந்த இடங்களில் பணி புரிகின்ற ஆண்களுக்கும் அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன.

ரோஜா குல்கந்து உடலை குளிர்ச்சி படுத்துகிற ஒரு உணவாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

இதயம்
நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது.

ரோஜா குல்கந்து சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்கிறது.
இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும்.

வெள்ளப்போக்கையும் குறைக்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும்.

ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

வயிற்று பிரச்சனைகள்

நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்து நமக்கு சக்தியை அளிக்கும் பணியை நமது வயிறு மற்றும் குடல்கள் செய்கின்றன.

வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள் மற்றும் இதர குடல் பிரச்சனைகள் நீங்க குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் மற்றும் வயிறு வீக்கம் குறைக்க உதவுகிறது.

சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குறிப்பாக PCOD நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

குல்கண்ட் உடலை குளிர்விக்க உதவுகிறது. எனவே வெப்பநிலை அதிகம் உள்ள காலங்களில் இதனை சாப்பிடுவது மிகச் சிறந்தது.

ரோஜா குல்கந்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

வயிற்று புண்கள் மற்றும் இதர குடல் பிரச்சனைகள் நீங்க குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்

ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

தைராய்டு உள்ளவர்களும் இது ஒரு சிறந்த மருந்தாகும்.

ரோஜா குல்கந்து உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவக்கூடும். உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், இதனை சாப்பிட்டு வர விரைவில் இரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தலைவலி, சோம்பல் மற்றும் சோர்வு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version