Homeநலவாழ்வுவழுக்கை தலையிலும் முடி வளர.. இதை உபயோகிக்கவும்!

வழுக்கை தலையிலும் முடி வளர.. இதை உபயோகிக்கவும்!

karisalan
karisalan

கரிசாலைச் சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்களும் ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.

கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள், எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை. மலர்கள், சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும். வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

மஞ்சள் காமாலை தீர பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும். மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்பட தேவையான அளவு பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, நன்றாகக் கழுவி, பசையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன், 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு நல்லெண்ணெயில் கலந்து, அடுப்பில் வைத்து, நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை ரு தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து, குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.

கண் பார்வை தெளிவடைய கரிசலாங்கண்ணித் தைலம்: கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும். மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டுவர வேண்டும்.

கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி:
பெரிய, மஞ்சள் நிறமான பூக்களைக் கொண்ட, கரிசலாங்கண்ணியின் வளரியல்பிலிருந்து மாறுபட்ட தாவரம். அதிகமாக இயற்கையில் வளர்வதில்லை. மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொற்றலை, பொற்கொடி, பொற்றலைக் கரிப்பான், பொற்றலைக் கையாந்தகரை ஆகிய பெயர்களும் மஞ்சள் கரிசாலைக்கு உண்டு. சில இடங்களில், முக்கியமாக நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.

மறதி, ரத்தசோகை, இளநரை, கண் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீர்க்கோளாறுகள், ரத்த அழுத்தம், மது அடிமைத்தனம், புகையிலை பழக்கம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய், ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்களை கரிசலாங்கண்ணி மூலிகை குணப்படுத்தும். தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘ஏ’ ஆகிய மூன்றும் ஒரு சேர சேர்ந்த மூலிகை தான் இது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதில் தங்கச்சத்து இருப்பதால், 6 மாதம் பயன்படுத்தினால் உடல் நிறம் தகதகவென்று மாறும்.

100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

நீர் – 85%,
மாவுப்பொருள் – 9.2%,
புரதம் – 4.4%,
கொழுப்பு – 0.8%,
கால்சியம் – 62 யூனிட்,
இரும்புத் தாது – 8.9 யூனிட்,
பாஸ்பரஸ் – 4.62%.
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

டீ, சூப் தயாரித்து சாப்பிடலாம். இதுதவிர கூந்தல் தைலம், மூலிகை பல்பொடி ஆகியவற்றையும் தயாரித்து உபயோகபடுத்தலாம்
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன.

கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி எளிய முறையில் கூந்தல் தைலம் தயாரிக்கலாம். வாய் அகன்ற எவர்சில்வர் பாத்திரத்தில் அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை எடுத்து ஊற்ற வேண்டும். அடுப்பில் வைத்து லேசாக தீயில் கொதிக்க விட வேண்டும். கொதி வரும்போது அதில் 50 கிராம் கரிசலாங்கண்ணி பவுடரை கொட்டி, கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இரண்டு நாள் கழித்து இந்த எண்ணெயை வடிகட்டி உபயோகப்படுத்தலாம். பாட்டிலில் அடைத்தும் விற்பனை செய்யலாம். தேங்காய் எண்ணெயில் தயாரித்த இந்த கூந்தல் தைலத்தை, தினமும் தலையில் தடவி வந்தால், தலைமுடி கறு, கறு என்று இருக்கும். குளிக்கும் முன் உடல் முழுவதும் நல்லெண்ணெயை தேய்த்தால் பித்த வெடிப்புகள் மறைந்து விடும்.

மூலிகை கூந்தல் தைலம் தயாரிக்க, கரிசலாங்கண்ணி பொடி, எண்ணெய் கொதிக்க வைத்த கலவையில் இருந்து வடிகட்டி, எண்ணெயை வடிகட்டி எடுத்த பின், அடியில் உள்ள வண்டலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, தலையில் தடவினால் முடி கறுத்த நிறமாக ஒரு மாதம் வரை இருக்கும்.

மெல்லிய வெள்ளை துணியில் கரிசலாங்கண்ணி பொடியை கட்டி, ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். அந்தத் துணி மூட்டை மூழ்கும் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் காயவையுங்கள். எண்ணெய் கறுப்பு நிறமாக மாறும். இதைத்தொடர்ந்து தலையில் தடவி வர, இளநரை மாறி முடி கரு, கரு என்று இருக்கும்.

கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2, ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து, கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால் ஒரு கிளாஸ் டீத்தூள் ரெடி. மொத்தமாக தயாரிப்பவர்கள் இந்த அளவை மனதில் கொண்டு, டீத்தூள் தயாரிக்கலாம். இந்த பொடியுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்தால் மூலிகை டீ தயார். விருப்பப்பட்டால் பால் சேர்த்து கொள்ளலாம். கரிசலாங்கண்ணி பொடியுடன் தூதுவளை பொடியையும் சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம்.

இந்த டீயை குடித்தால் வியாதி வராமல் தடுக்கும். பருவ காலங்களில் வரக்கூடிய தொற்று நோய்கள் அணுகாது. ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரிசலாங்கண்ணி தூள் சிறிதளவு கலக்கவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தால், சூப் ரெடி. இத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தக்காளி சேர்த்தால் சுவையாக இருக்கும். கரிசலாங்கண்ணி பொடி 75 சதவீதம், கிராம்பு, கருவேலம்பட்டை, கடுக்காய், சுக்கு, வாய்விளங்கம், மாசிக்காய், ஆலம் விழுது, எலுமிச்சம் பழம், இந்துப்பு ஆகிய பொருட்களை சேர்த்து பொடி செய்தால், பல்பொடி தயார். இந்த பல்பொடியை உபயோகித்தால் பல் நோய்களே வராது.

நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை கரிசலாங்கண்ணி தான். இது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க கரிசலாங்கண்ணி (karisalankanni) கீரை சிறந்த மருந்தாகும். கரிசலாங்கண்ணி கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தி கண் வறட்சியைப் போக்கும். கரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவயும் குணமாக்கும்.

stomach pain

கரிசலாங்கண்ணி கீரை குடல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. கரிசலாங்கண்ணி கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் குடல் அழற்சி குணமாகும். மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும், எரிச்சலையும் கரிசலாங்கண்ணி கீரை குணப்படுத்துகின்றது. மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. மேலும் அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றையும் சரிசெய்கிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீர கரிசலாங்கண்ணி உதவுகிறது. ஆஸ்துமா, இருமல் போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச நோய்கள் தீருவதுடன் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தில் உள்ள நீர்த்தன்னையை சரி செய்கிறது. கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தாலும் சுவாச சிக்கல்கள் குணமாகும்.

தேள் கடித்தலுக்கு
கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் சாற்றை மோரில் கலந்து குடித்தால் தேள் கடி விஷம் இறங்கிவிடும். தேனி கடித்தால் கடித்த இடத்தில் தேனியின் கொடுக்கைப் பிய்க்கக் கூடாது. கரிசலாங்கண்ணி இலை, 20 மிளகு மற்றும் சிறிதளவு தேங்காய் இரண்டையும் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இதனால் தேள்கடி விஷம் குறையும். ஆட்டுப்பாலுடன், கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து அரைத்து கொடுத்தால் விஷக் கடியால் ஏற்படும் வலி குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கரிசலாங்கண்ணி உதவுகிறது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதன் மூலம் எளிதில் பரவக்கூடிய காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். கரிசலாங்கண்ணி சாறை, எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்தும் குடித்து வரலாம். மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டிற்குமே நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

தோல் நோய்களை சரிசெய்ய
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். வாரத்துக்கு இரண்டு நாள் கரிசலாங்கண்ணி கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும் உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். மேலும் இந்த சாறை உடலில் தேய்த்தும் குளிக்கலாம்.

இன்றைய தலைமுறையினர் நரை முடியினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரி செய்ய கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு இந்த எண்ணெய்யை எடுத்து வடிகட்டி இத்தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

பொடுகை நீக்குகிறது
முடியின் வேர்ப்பகுதியில் இருந்து பொடுகை நீக்கி தோல் எரிச்சலை குணமாக்கும் தன்மை கரிசலாங்கண்ணிக்கு உள்ளது. 50 மில்லி தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் வெள்ளை கரிசலாங்கண்ணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைத்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை மறையும். முடி கருமையாக வளரும். கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்கும்.

வீட்டில் கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பது எப்படி
கரிசலாங்கண்ணி எண்ணெய்யை வீட்டிலேயே நாம் எளிமையாக தயாரிக்க முடியும். வயல் வெளிகளிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்து கிடைக்கும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி ஆரோக்கியமான கூந்தலுக்கு எப்படி எண்ணெய் தயாரிப்பது என விளக்கமாக இங்கு பாப்போம்.

எண்ணெய் தயாரிக்கும் முறை – 1

தேவையான பொருட்கள் :

கரிசலாங்கண்ணி இலை – 50 கிராம்,
நெல்லிக்காய் – 100 கிராம்,
கீழாநெல்லி இலை – 100 கிராம்,
கறிவேப்பிலை – 100 கிராம்,
செம்பருத்தி பூ – 100 கிராம்,
வெந்தயம் – 25 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர்.
செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட மூலிகைகளை எல்லாம் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்க விடவும்.

மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத் தொடங்கிய உடன் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.

karisal

எண்ணெய் தயாரிக்கும் முறை – 2

தேவையான பொருட்கள்

கரிசலாங்கண்ணி – 1 கப்,
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப்,
செம்பருத்தி இலை – 1/2 கப்,
செம்பருத்தி பூ – 1/2 கப்,
கறிவேப்பிலை – 1 கப்,
கீழாநெல்லி இலை – ½ கப்.

செய்முறை:

எண்ணெய்யை தவிர மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கழுவி வீட்டிற்குள் ஒரு துணியை விரித்து காய வைக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பேஸ்ட் போல் ஆகும் வரை அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெயை ஊற்றி அரைத்த விழுதை போடவும். பின்னர் அடுப்பை மெதுவான தீயில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.

சிறிது நேரத்தில் கொதி அடங்கியவுடன் நன்றாக ஆற வைக்கவும். பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்து 5-6 மணிநேரம் அப்படியே விட்டு விடவும். 6 மணி நேரத்திற்கு பிறகு இந்த எண்ணெயை வடிகட்டி தினமும் பயன்படுத்தவும்.

கரிசலாங்கண்ணி சீயக்காய் ஷாம்பூ தேவையான பொருட்கள் :

கரிசலாங்கண்ணி இலை – 3 கப்,
சீயக்காய்- 1 கிலோ,
செம்பருத்திப்பூ- 50,
பூலாங்கிழங்கு – 100 கிராம்,
எலுமிச்சை தோல் – 25,
பாசிப்பருப்பு – கால் கிலோ,
மரிக்கொழுந்து – 20 குச்சிகள்,
மல்லிகை பூ – 200 கிராம்.

செய்முறை :

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவுக்குப் பதிலாகப் இதனை பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ நன்றாக நுரை வரும். பொடுகை நீக்கி முடி கருமையாகும் தன்மை இந்த ஷாம்பூவிற்கு உள்ளது.

கரிசலாங்கண்ணியின் பக்க விளைவுகள்
கரிசலாங்கண்ணி எண்ணற்ற நன்மைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும், அதனை அதிகமாக பயன்படுத்தும் போது ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

குளிர்ச்சி
கரிசலாங்கண்ணி குளிர்ச்சியான மூலிகையாகும். இதனை குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேலே கொடுக்கும் போது பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். உதாரணமாக சளி, காய்ச்சல், ஜலதோஷம் பிரச்சனைகள் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. சைனஸ் பிரச்சனைகள் இருப்பவர்கள் அறவே தவிர்த்து விடுவது நல்லது.

எரிச்சல் உணர்வு
கரிசலாங்கண்ணி சிலருக்கு எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஏதேனும் ஆரோக்கிய காரணத்திற்காக கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி வருபவர்கள் எரிச்சல் உணர்வு தொற்றினால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். தோல் நோய்களுக்கு கரிசலாங்கண்ணியை பயன்படுத்தும் சமயத்தில் எரிச்சல் உண்டானால், அவற்றை உடனடியாக கழுவி விட்டு அங்கு ஐஸ் கட்டி கொண்டு தேய்க்கலாம்.

கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளலாம். நீர், பசுவின் நெய், தேன் ஆகியவற்றுடன் கலந்து சாப்பாட்டுக்கு முன் இதை உட்கொள்ளுங்கள். நாள்பட்ட காய்ச்சலுக்கு பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 – 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 – 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.

ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

கண்மை – :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.

காது வலி -: இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.

பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விடம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.

நாள்பட்ட காமாலை -: முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.

குட்டநோய் -: நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 – 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும்.

இளநரை வராமல் தடுக்கிற அற்புத சக்தி கரிசலாங் கண்ணியில் இருக்கிறது.
கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள். இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

இதைத் தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் 2 முறை இந்த ‘பேக்’ போட்டு குளித்து வந்தால், இளநரை பக்கத்திலேயே வராது.

hair 1 1 1

சிலருக்கு தலையில் ஆங்காங்கே வழுக்கை விழுந்து தோற்றம் பொலிவிழந்திருக்கும். வழுக்கையைப் போக்கி, கேசத்தை செழிப்பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங்கண்ணியின் தனித்துவம்!

செம்பருத்தி பூ – 1 கப், கரிசலாங்கண்ணி இலை – 1 கப்… இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள். இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும்வரை… அதாவது சுமார் 10 நாட்கள்… வெயிலில் வைத்து எடுங்கள்.

இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். செம்பருத்தி, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும். கரிசலாங்கண்ணி, வழுக்கை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும்.

Most Popular

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,957FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

Latest News : Read Now...

Exit mobile version