October 28, 2021, 4:38 am
More

  ARTICLE - SECTIONS

  அஞ்ச வைக்கும் நோய்களை விஞ்சும் நஞ்சறுப்பான்!

  nantcharupan - 1

  எதிர் அடுக்குகளில் முட்டை வடிவ இலைகளைக் கொண்ட சிறிய பூங்கொத்துக்களை உடைய வேலிகளில் படரும் சுற்றுக்கொடி இனம் நஞ்சறுப்பான். பஞ்சுடன் கூடிய முட்டை வடிவ விதைகளைக் கொண்டு இருக்கும். வேர், இலை மருத்துவக் குணம் உடையது. வாந்தியை ஏற்படுத்தும், வியர்வையை அதிகமாக்கும், கோழையை அகற்றும் குணம்கொண்டது. தமிழகமெங்கும் எல்லா மண்வளத்திலும் வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.

  வேறுபெயர்கள் : கொடிப்பாலை, கறிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொண்ணி.

  ஆங்கிலப்பெயர்: Tylophorqosthmatice; W&A; Asciepiadaceae

  நஞ்சறுப்பான் இலை விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி உண்டாக்கும். உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரின் சாறு ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது.

  இது நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய, சுற்றிப்படரும் கொடி வகைத் தாவரமாகும். இலைகள் முட்டை வடிவமானவை. எதிர் எதிராக தண்டில் அமைந்திருக்கும் 5 –10 செமீ நீளத்தில் பெரும்பாலும் நுனியை நோக்கியிருக்கும்.

  பூக்கள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் உட்பக்கம் இளஞ்சிவப்பாக சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள், பல நுண்ணிய விளிம்பு கோடுகளுடன் காணப்படும். தென்னிந்தியாவில் பொதுவாக சமவெளிகள் மலைப் பகுதிகளில் 1000 மீ உயரம் வரை பரவிக் காணப்படுகின்றது.

  கரிப்பாலை, நஞ்சு முறிச்சான் கொடி, கொடிப்பாலை, அந்தமூல், காகித்தம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. இலை, வேர், ஆகியவை சிறப்பான மருத்துவப் பயன் கொண்டவை.

  நஞ்சறுப்பான் இலை, வேர், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வியர்வையைப் பெருக்கும்; கோழையகற்றும்; விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி உண்டாக்கும். உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரை காய்ச்சி வடித்த சாறு மூச்சுக்குழல் அழற்சிக்கு உபயோகமாகின்றது. மேலும் இதன் வாந்தியை உண்டாக்கும் குணத்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது.

  ஆஸ்த்மாட்டிகா என்கிற தாவரவியல் சிற்றினப் பெயர் இது காசநோய்க்கு சிறப்பாக உபயோகப்படும் என்பதை குறிக்கின்றது.

  ஆஸ்துமா கட்டுபட நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ¼ முதல் ½ கிராம் அளவு தினமும் 3 வேளைகள் தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.

  நஞ்சை வெளியாக்க இலைகளை நன்கு அரைத்து, எலுமிச்சம் பழ அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது இலை, வேர் ஆகியவற்றை உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு, 2 தேக்கரண்டி அளவுடன் சிறிதளவு மிளகுத் தூள் கலந்து தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

  குழந்தைகளுக்கான கக்குவான் குணமாக இலைச் சூரணம் ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

  நஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.

  நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.

  நஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)

  நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.

  நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.

  நஞ்சறுப்பான் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி,வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாள்,இருவேளை குடித்து வந்தால் சளி,ஆஸ்துமா குறையும்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-