October 26, 2021, 1:53 am
More

  ARTICLE - SECTIONS

  பெயரு தான் வெட்டி.. பயனோ கெட்டி!

  vetti veru 1 - 1

  வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும்.

  இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும்.

  இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடலாம். இதன் வேர் மணத்துடன் இருக்கும்.

  இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.

  வேர், குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும். இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும்.

  நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த வெட்டி வேருக்கு உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தியானது அதிகமாக இருக்கிறது

  மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.

  வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

  செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய்
  உள்ளது.

  இதன் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது.

  வெட்டி வேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.

  கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும்.

  கோடைகாலங்களில், வீட்டிற்கு உள்பகுதியில் வெப்பத் தன்மை அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் நம் வீட்டு ஜன்னல்களில் வெட்டிவேரை கொண்டு செய்யப்பட்ட தடுப்புகளை வைத்து வர நம் வீட்டிற்குள் இருக்கும் வெப்ப நிலை குறைந்து குளிர்ச்சி தன்மையை அடைகிறது.

  வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.

  வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும்.

  இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.

  வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.

  தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பூசினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.

  நமக்கு காய்ச்சல் வந்த பின்பு உடலில் வலியும், சோர்வும் அதிகமாக இருக்கும். இதனை நீக்க வெட்டி வேரை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சோர்வும் உடல், வலியும் நீங்கும். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணும் குணமடையும்.

  முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. துண்டுகளாக வெட்டிய வெட்டிவேர் சிறிதளவு, கொட்டை நீக்கிய கடுக்காய் 1. இவை இரண்டையும் முதல் நாள் இரவே சுடுநீரில் போட்டு ஊற வைத்து விடவேண்டும். மறு நாள் அதை அரைத்து விழுதாக்கி அந்த விழுதை பருக்கள் மீது தடவி வர பருக்கள் தழும்பு இல்லாமல் மறைந்துவிடும்.

  தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த எண்ணையை இரண்டு நாட்கள் கழித்து நம் காலில் எங்கு வலி உள்ளதோ அந்த இடங்களில் தடவி வரலாம். இப்படி தொடர்ந்து செய்து வர கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்

  ஆயுர்வேதத்தில் வெட்டி வேரில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெயானது மன அமைதிக்கும், மன நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இவைத்தவிர வெட்டிவேரை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் விசிறியை கொண்டு வீசினால் அதில் வரும் காற்றில் மூலம் உடல் எரிச்சல், தொண்டை வறட்சி போன்றவை நீங்கும்.

  வெட்டிவேர் டானிக்
  நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் டானிகிணை குடித்து வந்தால் செரிமான பிரச்சனை, சுவாசக் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, நீங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. அன்றாட வேலையை சுறுசுறுப்பாக செய்வதற்கு நம் உடலானது அதிக ஆற்றலை பெறுகிறது.

  ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது.

  இயற்கையான நல்ல வாசம் தரக்கூடிய ஒரு வேர், இந்த வேர். நம் வீட்டில் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான்.

  வாசம் நிறைந்த இடம் என்றாலே அந்த இடத்தில் கட்டாயம் மகாலட்சுமி இருப்பாள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த வேரை முறையாக எப்படி பயன்படுத்தினால்,. வாசம் செய்வாள் காணலாம்.

  இந்த வேர், சாதாரணமாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி எப்போதுமே வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி,

  அதில் ஒரு எலுமிச்சை பழத்தையும் போட்டு, இந்த வேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அந்த வாசத்திற்கு நம்முடைய வீடு மிகவும் மங்களகரமாக இருக்கும்.

  இந்த வாசத்தில் தான் மகாலட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும்.

  எலுமிச்சை பழத்தையும் மாற்ற வேண்டும். தண்ணீரில் இருக்கும் வேர் கெட்டுப் போக வாய்ப்பில்லை. மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

  எந்த ஒரு கெட்ட சக்தி யும், இந்த வேரிடம் நெருங்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. சிறிதளவு வெட்டிவேரை எடுத்து, ஒரு சிறிய மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் கட்டி வைத்தாலே போதும். உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாமல் இருக்கும்.

  இந்த வெட்டிவேரை சிறிதளவு எடுத்து நன்றாக காயவைத்து அதன் பின்பு மிக்ஸியில் நன்றாக பொடி செய்து, சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  சிறிதளவு வேப்பங் கொழுந்தையும், நன்றாக உலர வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன்பின்பு, இந்த தூளை நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியோடு கலந்து விடுங்கள்.

  தினந்தோறும் அந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டு, வெளியே செல்லும் பட்சத்தில் நீங்கள் செல்லும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அது வெற்றியில் முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  இதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டியாக இருந்தாலும், எந்த ஒரு கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது என்பதும் உண்மை.

  வெட்டிவேரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து அதன் பின்பு, அந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும்,

  எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக வெட்டிவேரை சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில்,

  நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

  வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை தூண்டுகிறது.

  மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது உடலில் உள்ள போதை நீக்க பணிகளை செய்து நிணநீர்க்குரிய வடிகாலை தூண்டுகிறது.

  ஒரு ஸ்பெஷல் பேக்:
  வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்

  (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

  வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

  சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

  சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

  இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது. பச்சைப்பயறு – 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – 50 கிராம்

  இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்

  வெட்டிவேர் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம் இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

  வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில் போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து

  வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல் முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.

  வெட்டி வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி குணமாகும்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-