September 28, 2021, 11:55 am
More

  ARTICLE - SECTIONS

  அத்தனை பயனாம் இந்த குந்துமணி!

  kundumani 1 1 - 1

  மூலிகைப் பெயர் குன்றிமணி
  மாற்றுப்பெயர்கள் குண்டுமணி, குன்றி வித்து
  தாவரவியல் பெயர் Abrus Precatorius
  சுவை சிறு கசப்பு, இனிப்பு
  தன்மை(இலை குளிர்ச்சி
  தன்மை(வேர் & விதை வெப்பம்

  இந்தியாவைச் சேர்ந்த இந்த தாவரம் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், வேலி மற்றும் புதர்களிலும் வளர்கிறது. இந்தியாவில் பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் அளவு அறிய விதைகள் எடைகளாகப் பயன்பட்டன.

  செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளில் அபிரின், இன்டோன் ஆல்கலாய்டுகள், டிரைடெர்பினாய்டு சபோனின்கள், ஆந்தசையானின்கள் உள்ளன. வேர்கள் மற்றும் இலைகளிலும் கிளைசரிரைசா, சிறிது அபிரினும் காணப்படுகின்றன.

  விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெயில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக்,லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

  12 வண்ணங்களில் குன்றின் மணிகள் கிடைக்கும். ஆனால் இதில் தற்சமயம் கருப்பு சிகப்பு சேர்ந்த குன்றின் மணி, வெள்ளை, சுத்தமான சிகப்பு, பச்சை, கருப்பு இந்த நான்கு வண்ணங்களிலும் குன்றின் மணிகள் புழக்கத்தில் உள்ளன. – -கருப்பு வண்ணத்தையும் சிகப்பு வண்ணத்தையும் ஒன்றாக சேர்த்தால் போல் இருக்கும்
  கருப்பு குன்றின் மணி ராஜஸ்தானில் அதிகமாக விளைகின்றது. ராஜஸ்தானில் உள்ள மக்கள் முக்கியமான பூஜைகளை இந்த கருப்பின் குன்றின் மணி இல்லாமல் செய்யமாட்டார்கள். அந்த காளியின் அம்சமாக கருப்பு குன்றின் மணி கருதப்படுகிறது. இதை நம் வீட்டில் வைத்திருந்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது. பிறரால் நமக்கு வைக்கப்படும் பில்லி சூனியங்கள் நம்மளை தாக்காது. மந்திர தந்திரங்கள் செய்பவர்கள் இன்றளவும் இந்த குன்றின் மணியை பயன்படுத்தி வருகின்றார்கள். இதை தாயத்தாக குழந்தைகளுக்கு கழுத்தில் அணிவித்தால், திருஷ்டியும், கெட்ட சக்தியும் அண்டவே அண்டாது.

  வெள்ளை குன்றின் மணி அந்த அம்பாளின் அம்சமாக வழிபடுகிறார்கள். தொடர்ந்து தோல்வியை சந்திப்பவர்கள் இந்தக் குன்றின் மணியை தன்னிடம் வைத்துக் கொண்டால் வெற்றியை அடையலாம்.

  kuntrumani green - 2

  தொழிலில் தோல்வி இருந்தாலும், படிப்பில் தோல்வி இருந்தாலும், எப்படிப்பட்ட தோல்வியாக இருந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் சக்தி இந்த வெள்ளை குன்றின் மணிக்கு உள்ளது.

  சுத்தமான சிகப்பு வர்ணத்தை உடைய குன்றின் மணியானது எளிதாக நமக்கு கிடைக்காது. அடர்ந்த காடுகளில் மட்டுமே விளையக்கூடிய இந்தக் குன்றின் மணி எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி உடையது.

  சிலர் எந்த நேரமும் நமக்கு ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ அல்லது நம்மை சேர்ந்தவருக்கு ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

  இவர்களது இந்த எதிர்மறையான எண்ணத்தை மாற்ற இந்த சிகப்பு குன்றின்மணி மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் இதனை வைத்திருப்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மற்ற எந்தத் தீட்டும் அண்ட கூடாது.
  தீட்டு ஏற்படும் சமயத்தில் இதை பூஜை அறையில் வைத்து விடலாம்.

  பச்சைக் குன்றின் மணியானது கிடைப்பது மிகவும் அறிது. இதை வைத்து குபேர பூஜை செய்துவந்தால் பணவரவு அதிகரிக்கும். ஆனால் பச்சை குன்றின் மணியானது காய்ந்து விட்டால் அதன் பலன் குறைந்து விடும். சாயம் பூசப்பட்ட குன்றின் மணிகள் கடைகளில் போலியாக விற்கப்படுகின்றன. இதனால் எது உண்மையான குன்றின் மணி என்பதை அறிந்து நம்பிக்கையானவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.

  ஆனைக் குன்றிமணிக் காய்களில், பீன்ஸ் விதைகளைப் போல இளஞ்சிவப்பு பவள வண்ணத்தில் காணப்படும் இதன் விதைகள், வழக்கமான குன்றிமணிகள் போன்று கருப்புப் புள்ளிகள் இல்லாமல் காணப்படும். இரண்டு குன்றிமணி மரங்களும் வெவ்வேறு தாவரப் பெயர்களால், ஆங்கிலத்தில் குறிக்கப்படுகின்றன.

  தோல்நோய்கள்: இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுடனான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.

  நரம்பு கோளறுகளை குணமாக்கும்: வேர் வலுவேற்றி, சிறுநீர்போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச்செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறுகளுக்கு மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்றுவிப்பது, விதைகளின் பசை மேல்பூச்சாக தோள்பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்கவாதத்தில் பயன்படுகிறது.

  முடி வளர குன்றிமணி:

  “கையாந்தகரை சாறு நாலுபலம் எடுத்து
  ரெண்டு பலம் குன்றிமணிப் பருப்பு கலந்தரைத்து
  ஒரு பலம் எள் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி சீலை வடிகட்டி
  தினம் பூசப்பா கிழவனுக்கு குமரன் போல் சடை காணும்”

  என்பது சித்தர் பாடல். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து நல்லெண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும்.

  kundhumani - 3

  இலைகளை கசாயம் செய்து குடிப்பதால் இருமல், சளி மற்றும் குடல் வலியினை சரி செய்கிறது. இதன் இலைச் சாறுடன் எண்ணெய் கலந்து வீக்கம் ஏற்ப்பட்ட இடங்களில் பூசி வருவதன் மூலம் நாளடைவில் விக்கம் குறையும்.
  நரம்புக் கோளாறுகளை சரி செய்வதற்கும் குன்றிமணி பயன்படுகிறது.

  குன்றி மணியில் இருந்து எடுக்கப்படும் எண்ணை மிகுந்த மணம் உடையதாக இருக்கும். இதனால் பல்வேறு அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

  மிளகு, பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் இவற்றைச் சேர்த்து, துளசிச் சாற்றைக் கலந்து மையாக அரைத்து, இந்தக் கலவையை, மாதாந்திர விலக்கின் மூன்றாம் நாளில் தண்ணீரில் கலந்து பருக, பாதிப்புகள் விலகி, மகப்பேறடைய வாய்ப்புகள் உண்டாகும், என்கின்றனர்

  குழந்தைகளுக்கு, உணவில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால், வயிறு பாதித்து, அதிக நீருடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, குழந்தைகள் உடனே, சோர்வடைந்து விடுவர். இந்த பாதிப்பை சரி செய்ய, அத்திப்பால், புளியங்கொட்டை தோல், வெள்ளைக் குன்றிமணி விதைகள் இவற்றை சேர்த்து, துளசிச் சாறு இட்டு, நன்கு அரைத்து, அந்த விழுதை, தினமும் இரு வேளை, முழு பாக்கு அளவில் எடுத்து, வெண்ணையில் வைத்து கொடுத்து வர, குழந்தைகளின் வயிற்றுப் போக்கு பாதிப்புகள், விலகி விடும்.

  ஆனைக் குன்றிமணியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து, நன்கு அலசி, பூண்டு சேர்த்து, கீரைக்கடையலாக மசித்து, சாப்பாட்டில் சேர்த்து உண்ணலாம். அல்லது, கூட்டு போல செய்து, உணவில் தொட்டுக்கொள்ள பயன்படுத்த, செரிமான பாதிப்புகள் விலகி, உடலுக்கு, நல்ல சத்துக்கள் கிடைத்து, வயிறு நலம் பெறும்.
  குன்றிமணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணை, தாதுக்கள், புரதச் சத்துக்கள் நிறைந்த ஒரு நன்மை தரும் எண்ணையாகும். இந்த எண்ணையை உணவில் சேர்த்து வர, செரிமானத்தைத் தூண்டி, உடலில், இரத்தத்தில் கலந்து உள்ள நச்சுக் கொழுப்புகளை கரைத்து, வெளியேற்றும் ஆற்றல் மிக்கது.

  அடிபட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள் சிலர், கால்களில் அடி பட்டிருந்தால், நடந்தால் ஏற்படும் வேதனையால், வீட்டிலேயே இருப்பார்கள். இவர்களின் வேதனையைப் போக்க, குன்றிமணி விதைகளின் பருப்பை எடுத்து, காலையில் தண்ணீரில் ஊற வைத்து, மாலையில், அந்த பருப்புகளைத் தனியே எடுத்து, அம்மியில் அரைத்து, அரைத்த விழுதை, ஆலக்கரண்டி எனும் குழியான இரும்புக் கரண்டியில் இட்டு நீர் வற்றும் வரை சூடாக்கி, ஆறிய பின், இரவில், உடலில் அடிபட்ட வீக்கங்கள் உள்ள இடங்களில், இந்த விழுதைத் தடவி வர, காலையில் வலிகள் நீங்கி, வீக்கங்கள் வடிந்து, நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

  வயிற்றுப்போக்கு, வயிற்று வேதனை மற்றும் தலைவலிக்கு, குன்றிமணி மரப் பட்டைத்தூளை, நீரில் நன்கு சுண்டக் காய்ச்சி பருகி வர, அவையெல்லாம் விலகி விடும்.

  பூக்கள் வெண்மையாயிருப்பின் விதையும் வெண்மையாயிருக்கும். இது கொடி வகையைச் சேர்ந்தது. இலையை மென்று சாற்றை விழுங்குவதால் குரல் கம்மல் நீங்கும்.

  எண்ணெயுடன் இலைச்சாற்றைக் கலந்து வலியுள்ள வீக்கங்களுக்குப் பூசிவர வீக்கம் நீங்கும்.

  விதையைத் தனியாகவோ, மற்ற மருந்துகளுடனோ சேர்த்தரைத்து, அடிபட்ட வீக்கம், வலி, கீல்வாயு, பக்க வலி, முடியுதிரல் முதலியவைகளுக்குத் தரலாம்.

  வெள்ளைக் குன்றிமணி வேரை வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற வைத்து உலர்த்தி பாம்பு, தேள் முதலியவற்றின் நஞ்சுக்குக் கொடுக்க அது உடனே தீரும். இதற்கு விடதாரி என்று பெயர்.

  சிவந்த குன்றிமணிப் பருப்பினால் கணணோய், அழல் நோய், மாறு நிறம், காமாலை, வியர்வையோடு கூடிய மூர்ச்சை சுரம் ஐய (கபம்)நோய் ஆகியவை தீரும்.

  குன்றிமணி இலையைக் கொண்டுவந்து இடித்துப் பிழிந்து சாறு எடுத்து வாய்ப்புண்களுக்குத் தடவினால் புண்கள் குணமாகும்.

  வயதாகியும் ஒரு சில பெண்கள் பூப்பு அடையாமலிருப்பது உண்டு. குன்றிமணி இலையை எடுத்து சமனளவு எள்ளும் அதே அளவு வெல்லமும் சேர்த்து இடித்து எலுமிச்சம் பழ அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்துவிட்டால், 24 மணி நேரத்திற்குள் பூப்பு அடைவார்கள்.

  இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால், வாழைக்காயைத் தோலைச் சீவிவிட்டுக் காயை மட்டும் தின்னக் கொடுக்க வேண்டும். குண்றி மணி இலை மருந்தை ஒரு முறை தான் கொடுக்க வேண்டும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,481FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-