September 27, 2021, 10:04 am
More

  ARTICLE - SECTIONS

  எலுமிச்சை புல் தரும் ஏராளமான பயன்!

  lemon grass - 1

  லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது.

  சிலர் இதனை காமாட்சிப் புல் என்பார்கள். இதன் தாவரப் பெயர் “CYMBOPOGAN FLEXOSUS” என்றும், GRAMINAE என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.

  இந்த லெமன் க்ராஸ் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டதாகும்.

  இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சீனாவில் அதிகமாக விளையும் பொருளான இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய வகையைச் சேர்ந்ததாகும்.

  மேலும் இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது! வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளரச் செய்யலாம்.

  இது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். அதனால்தான் நாம் மேலே குறிப்பிட்டதுபோல் தமிழகத்தில் “எலுமிச்சைப் புல்”, “இஞ்சிப் புல்” என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

  மருத்துவ பயன்க‌ள்:
  லெமன் க்ராஸ் நல்ல செரிமாணத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால், மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

  இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும் ,தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது.

  இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் அனைத்தும் பறந்து போய் விடும்.

  genger Grass - 2

  எலுமிச்சைப்புல் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்னமின்மையை குறைக்கவல்லது என்பதை கண்டறிந்துளார்கள்.

  இந்த எலுமிச்சை புல் டீயை தயாரிக்க, முதலில் இந்த புல்லை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இதனை வடிகட்டி குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.

  இந்த எலுமிச்சை புல் ஒருவித ஆயுர்வேதமாகவே கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. உடல் முழுக்க உள்ள கழுவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற இந்த டீ பெரும்பாலும் உதவும். இது எலுமிச்சையை போன்ற மணமும் கொண்டது.

  இந்த புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் இந்த டீ பயன்படுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

  பலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ. குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்.

  மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு இது வெகுவாக உதவுகிறது. எலுமிச்சை புல்லில் உள்ள சிட்ரலானது வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவிப்புரிகிறது. மேலும் இது சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக உள்ளது. எனவே இதை உட்கொள்வது உடலுக்கு அதிக நன்மையளிக்கிறது.

  ஒரு மாதத்திற்கு தொடர்ந்து தினமும் ஒரு கப் எலுமிச்சை புல் ஜூஸ் அருந்துவதால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அளவும் அதிகரிக்கிறது. இதில் ஃபோலிக் அமிலம், தாமிரம், தயாமின், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. எனவே எலுமிச்சை புல் ஜூஸ் தினமும் ஒரு கப் அருந்துவதை தினசரி விஷயமாக மாற்றிக் கொள்ளலாம்.

  எலுமிச்சை புல் அதிகமாக பொட்டாசியம் சத்துக்களை கொண்டது. இது உடலில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் பொட்டாசியம் சிறுநீர் உற்பத்திக்கு உதவுகிறது. இரத்த ஓட்டத்தையும் இது ஊக்குவிப்பதோடு கல்லீரலையும் சுத்திகரிக்கிறது.

  தோலை பராமரிக்க எலுமிச்சை புல் பெருமளவில் உதவுகிறது. எலுமிச்சை புல் நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டது. இதனால் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்த இது உதவுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயோடு எலுமிச்சை புல் துளிகளை சிறிது கலந்து தோல் மற்றும் முடிகளில் தடவலாம். இது தலை தொடர்பான எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.

  லெமன் க்ராஸ் டீ
  லெமன் க்ராஸ் பவுடர்
  லெமன் க்ராஸ் ஆயில்
  லெமன் க்ராஸ் சோப்பு
  லெமன் க்ராஸ் ரூம் பிரெஸ்னர்
  என எண்ணற்ற பொருட்கள் தயாரிக்க இது மூலப்பொருளாக பயன் படுகிறது.

  லெமன் க்ராஸ் டீ

  லெமன் க்ராஸ் டீயை தயாரிக்க, அதன் இலைகளை சிறிதாக நறுக்கி நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். 10 நிமிடம் கொதிக்க விட்டால் போதுமானது, இத்துடன் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பருகினால் பலன் முழுமையாக கிடைக்கும்.

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் நம் அருகில் வராது.

  லெமன் க்ராஸ் ஆயில்

  இது வெளிப்புற பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது. சரும பிரச்சனைகளையும், வலிகளையும் நீக்க உதவுகிறது. கிருமி நாசினியாகவும், மணமுட்டியாகவும் பயன்படுகிறது. தீபங்களில் இந்த ஆயிலை பயன்படுத்தும் போது நறுமணமும், புத்துணர்வும் உண்டாகும்.

  வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம், கொசுக்களை விரட்டி அடிக்கும் தன்மை இதற்கு உண்டு என்பதால் அவசியம் வளர்ப்பது நல்லது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,465FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-