September 28, 2021, 2:07 pm
More

  ARTICLE - SECTIONS

  மூச்சு முட்டுதா.. விழுதியை உண்டால் விழுந்தடித்து ஓடலாம்!

  vizhuthi - 1

  விளச்சி மரம் என்று அழைக்கப்படும் விழுதி மரங்கள், சீனத்தைத் தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரங்கள் என்று இன்றைய அறிவியல் உரைத்தாலும், இவை, சைவ சமயக்குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே, தமிழகத்தில் இருந்து வரும், அரிய மூலிகை நன்மைகள் கொண்ட ஒரு மரமாகும்.

  தனித் தனியான இலைகளையும், இள வெண்ணிற மலர்களையும், சிவப்பு வண்ணக் கனிகளையும் கொண்ட விழுதி மரம், சிறு செடி வகையைச் சேர்ந்ததாகும். விழுதி மரத்தின் கனிகள் சிவந்த நிறத்தில், சுவையாக இருக்கும் மேலும்,இதன் நறுமணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த காரணங்களுக்காக, இன்று உலகின் பல இடங்களில் நறுமணத்துக்காக வளர்க்கப்படுகின்றன,

  விழுதி மரங்கள். சித்த மருத்துவத்தில் உயர்வான குணங்களைக் கொண்ட மூலிகை மரமாகக் கருதப்படும் விழுதி மரம், திருக்கோவில்களில் தல மரமெனப் பாதுகாக்கப்படும் அரிய மரங்களில் ஒன்றாக, விளங்குகிறது.

  கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள,திருவீழிமிழலை எனும் ஊரிலுள்ள, புகழ்பெற்ற சிவன் கோவிலின் தல மரமாகத் திகழ்கிறது. இலை, காய் மற்றும் வேர்கள் மூலம், அதிக மருத்துவ பலன்கள் தரும் விழுதி மரங்கள்.

  வெண்மேகம் எனும் பாலியல் நோயினை குணப்படுத்தும் மரம், இரண்டாயிரம் ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுவது,

  பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

  வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, இந்தோசீனா, மியான்மர் ஆகிய இடங்களில் பரவி உள்ளது.

  இந்தியாவில் அருகிவரும் அல்லது அழிந்து வரும் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேற்குத் தொடர்ச்சி மலையின் மரம் என்று அறியப்படுகிறது.

  மகாராஷ்டிராவில் கோலாப்பூர், கர்நாடகாவில் கூர்க் மற்றும் மைசூர் வடக்கு கேனரா, மற்றும் கேரளாவில் இடுக்கி .

  பொதுப்பெயர் (COMMON NAME): இண்டியன் கடபா
  தாவரவியல் பெயர் (BOTANICAL NAME): கடபா ஃப்ரக்டிகோசா
  தாவரக்குடும்பம் (FAMILY):கப்பாரியேசியே

  பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
  மலையாளம் : கட்டாகிட்டி (KATTAKITTI)
  கன்னடம்: மரகாடிகிட்டா (MARAGADE GIDA)
  தெலுங்கு: ஆடமொரினிகா (AADAMORINIKA)
  குஜராத்தி: கலோகட்டாக்கியோ (KALO KATTAKIO)
  இந்தி: டாபி (DABI)

  மரங்களின் இயல்பு (DESCRIPTION)

  விழுதி கொடிபோல புதர் செடியாக வளரும், அதிகபட்சமாக 5 மீட்டர் உயரம் வளரும்.

  வெண்ணிறப் பூக்கள் கிளை நுனியில், நான்கு இதழ்களையுடைய பூக்களாக ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும்.

  கனிகள் உருளையாக தோல்பை அல்லது சிறிய மிளகாய் பழம்போல மென்மையாக இருக்கும்.

  விதைகள் அழகிய ஆரஞ்சு நிற பொட்டுபோல வட்ட வடிவமாக இருக்கும்.
  பயன்கள்: (USES)

  லேகியம் எண்ணை, களிம்பு, கசாயம், குடிநீர், சூரணம், செந்தூரம், தைலம் ஆகியவை விழியை பயன்படுத்தி செய்யப்படும் மருந்து வகைகள்.

  வீழி கட்டுப்படுத்தும் நோய்கள், அஜீரணம், இடுப்பு வலி, இருமல், இரைப்பு இருமல், ஈழை இருமல், கட்டி உடைய, கபம், கருப்பை நோய்கள், காசநோய், கிரந்தி, குடற்புழு நீக்க, குடைச்சல், குத்தல், குன்மம், கை கால் எரிவு, கை கால் பிடிப்பு, சருமநோய்கள், சிறுநீர் பெருக்க, சுகபேதி, சொரி சிறங்கு, தலைவலி, தாதுபுஷ்டி, தொழுநோய், நீர்கடுப்பு, நீரிழிவு, புற்றுநோய், பெருவயிறு, மந்தம், முழங்கால், மூலம், மேகம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிறு வீக்கம், வாத நோய், மற்றும் வெண்படை

  சித்த மருத்துவத்தில் காய சித்தி மூலிகைகளில் ஒன்று, காயசித்தி மூலிகைகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்கள்.

  பொதுவாக, வாத வியாதிகளைப் போக்கக் கூடியது, வீக்கங்கள் கட்டிகளை கரைக்கும் தன்மை மிக்கது.குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் நிலையை மாற்றும் விழுதி இலைகள்!

  சில பெண்களுக்கு, திருமணம் ஆகியும், குழந்தை பெற இயலாத பாதிப்புகள் உண்டாகி, சமூகத்திலும், மன ரீதியிலும் அதிக பாதிப்புகளை அடைந்து இருப்பர். சிலர் மிக அதிகம் செலவு பிடிக்கும் நவீன மருத்துவ பரிசோதனைகள் செய்து, அதில் கருப்பையில் உண்டாகும் கரு முட்டைகளின் அளவு குறைந்திருப்பதால், அல்லது உருவாகாததால், குழந்தை பெற முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதை அறிந்து, அந்தக் குறையைப் போக்க, மேலை மருந்துகள் நிறைய சாப்பிட்டு வருவர். இருப்பினும் அனைவருக்கும் பலன்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும். அப்படி பாதிப்புகள் உள்ளவர்கள், மனதாலும், உடலாலும் வேதனைப் பட்டவர்கள், ஒரு பைசா கூட செலவு செய்யாமல், தாய்மையை அடையும் வழியை,விழுதி உண்டாக்கும்.

  விழுதி இலைகளை நன்கு அலசி சாறெடுத்து, அதில் கால் தம்ளர் அளவு நல்லெண்ணை சேர்த்து தினமும் பருகி வர, கரு முட்டைகளின் உருவாக்கம் அதிகரித்து, விரைவில் கருவுற்று, நலமுடன் மகவீனும் தன்மை ஏற்படும்.

  வீக்கம் போக்க: மூட்டுகளில் நீர் கோர்த்துக்கொண்டு வலி, வீக்கம் ஏற்பட்டு துன்புறுபவர்கள் எல்லாம்,சிறிது விழுதி இலைகள், சில மிளகுகளை எடுத்து தூளாக்கி, பூண்டு சில பற்கள், சீரகம் சிறிது எடுத்துக்கொண்டு, விளக்கெண்ணையில் வதக்கி தாளித்து, இரசம் போல உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, மூட்டுகளில் சேர்ந்த நீர் வடிந்து, உடல் வலிகள் நீங்கும்.

  சளி காய்ச்சல் போக்கும் விழுதி இலைகள்: கபம் எனும் சளி, இருமல் ஜுரம் போன்ற பாதிப்புகள் விலக, விழுதி இலைகளை அரைத்து, சாறெடுத்து, அதை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, தலையில் தடவி குளித்து வர, இருமல் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகன்று விடும். அது மட்டுமல்ல, உடலில் உள்ள சகல வியாதிகளையும் சரியாக்கி விடும் தன்மை.

  பல் வலி, இரத்தக் கசிவு பாதிப்புகள் போக்க :
  பல்வலி, பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்ற பல் சம்பந்தமான பாதிப்புகள் நீங்க, சில விழுதி இலைகளை நன்கு அலசி, தண்ணீரில் இட்டு சுண்டக் காய்ச்சி,

  பிறகு ஆற வைத்து, அந்த நீரைக் கொண்டு, வாயை கொப்புளித்து வர, பல் வலி, ஈறுகளில் ஏற்படும் இரத்தம் வடிதல் போன்ற அனைத்து பல் தொடர்பான பாதிப்புகள் நீங்கி விடும்.

  உடலை பாதிக்கும் குடற்புழுக்களை அகற்ற:
  குழந்தைகள் சிலருக்கு எவ்வளவு நல்ல உணவுகள் சாப்பிட்டாலும், உடல் தேறாமல். இளைத்தும், சோர்ந்தும் காணப்படுவர். அவர்களின் அந்த நிலைக்குக்
  காரணமானவை, வயிற்றில் உள்ள புழுக்கள், இவற்றை அழிக்க, விழுதி இலைகளை அரைத்து, சாறெடுத்து, தேனுடன் கலந்து தினமும் இரவில் பருகி வர, புழுக்கள் விரைவில் அழிந்து, உடல் தேறி, பொலிவாகும்.

  ஆறாத காயங்கள் ஆற :
  அழிஞ்சில் எனும் மூலிகையின் வேருடன், விழுதி வேரை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிச் சேர்த்து, சில நாட்கள் நிழலில் உலர்த்தி, மண் பானையில் போட்டு குழித்தைலம் எனும் முறையில் தயாரித்து, புரையோடி இருக்கும் காயத்தில் தடவி, மெல்லிய துணியால் கட்டு கட்டிவர, புரையோடியிருந்த ஆறாத காயங்கள் எல்லாம், விரைவில் ஆறி விடும்.

  நுரையீரல் பலம் பெற நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம்
  ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள்

  எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி.
  ஆச்சரியமாக இருக்கலாம்
  ஆனால் இதுதான் உண்மை
  இதற்குக் காரணம் யாதெனில்
  பச்சையாக இருக்கின்ற விழுதி இலையை நன்றாக உமிழ்நீருடன் கலக்கும்படி மென்று அதன்பின் விழுங்கி வந்தால்
  இதன் மூலமாக உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு
  அதாவது வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது

  இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே நடைபெறுகின்றது

  இந்த மாற்றத்தை ஒரே நாளில் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது இதை உணர்ந்து கொள்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும்

  ஒரு பயிற்சி முறை
  இன்று விழுதி இலையை உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடிப் பாருங்கள்
  அடுத்த நாள் விழுதி இலையை மென்று விழுங்கி விட்டு அதே தூரத்தை ஓடிப் பாருங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண்மையில் உணரலாம்

  முதல் நாள் ஓடுகின்ற பொழுது அதிகமான களைப்பு ஏற்படும் அடுத்த நாள் ஓடுகின்ற போது அந்த களைப்பின் அளவு குறைந்துவிடும்

  விழுதி இலையை மென்று விழுங்கி விட்டு ஓடுகின்ற பொழுது இரண்டொரு நாட்களில் பெரிதான வித்தியாசம் தெரியாவிட்டாலும் ஒரு வார காலத்தின் முடிவில் ஓடினால் ஏற்படும் பெருமூச்சும் உடல் களைப்பும் முழுமையாக நீங்கிவிடும் இந்த வித்தியாசத்தை நாம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்

  தினமும் இந்த வைத்திய முறையை கடைபிடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறுகின்றது ஓடினால் செலவாகும் பிராணசக்தி உடனே உடலில் சேகரிக்கப்படுகிறது அதனால்தான் ஓடினாலும் உடலில் களைப்பு ஏற்படுவதில்லை

  எனவே இன்றைய காலகட்டத்திற்கு பிராண சக்தியைப் பெறுவதற்காக இதைவிட பெரியதொரு எளிதான வைத்திய முறை இனி தேடினாலும் கிடைக்காது பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள்

  விழுதி இலையை தினந்தோறும் உண்டு வந்தால் நுரையீரல் பலம் பெறுவதோடு மட்டுமல்லாமல் வாத பித்த சிலேத்தும் எனும் முக்குணங்களின் மாறுபாடுகள் சமநிலை படுத்தப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி உடலில் தோன்றும் நோய்கள் அனைத்தும் விலகி விடுமளவிற்கு இந்த விழுதி இலை உதவுகின்றது

  விழுதி இலையை உண்டு வந்தால்
  உடல் பலவீனம் நீங்கும்
  தேவையற்ற கொழுப்புகள் குறையும் உடல் இறுகி நரம்பு மண்டலம் பலம் பெறும்
  உடலின் வெப்பம் தணியும்
  உடலின் களைப்பு நீங்கும்
  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டை கர்ப்பப்பை கோளாறுகள் போன்ற நோய்கள் அனைத்தும் நீங்கும்
  பச்சையாக விழுதி இலை கிடைக்காவிட்டால்
  நூறு கிராம் விழுதி இலை பொடியுடன் இருபது கிராம் சீரக பொடியும் பத்து கிராம் மிளகு பொடியும் ஐந்து கிராம் மஞ்சள் பொடியும் கலந்து இதை தினந்தோறும் காலை மாலை இருவேளையும் வெந்நீர் அல்லது பாலுடன் கலந்து ஒரு மண்டல காலம் பருகி வர நுரையீரலுக்கு பலமுண்டாகும்

  மேலும் இதன் மூலம் மேலே சொன்ன அனைத்து பயன்களும் நமது உடலுக்கு கிடைக்கும் குறிப்பாக சுவாச சம்பந்தமான ஆஸ்துமா மூக்கடைப்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதல் போன்ற நோய்கள் அனைத்தும் விழுதி இலையை உண்டு வந்தால் விலகி ஓடிவிடும்

  விழுதி இலையில் இன்னொரு எளிய வைத்திய முறை
  நமது வீட்டில் ரசம் வைக்கின்ற பொழுது கருவேப்பிலை இலையோடு இந்த விழுதி இலையை பத்து அல்லது பதினைந்து இலைகள் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் இதன் மூலம் உடலில் இருக்கின்ற வாதநீர்கள் வெளியேறி உடல் வலிகள் நீங்கும் வாத நோய்கள் உடலில் வராதபடி நமது உடலை காக்கும் மலச்சிக்கல் விலகும் மேலும் உடலுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-