September 27, 2021, 9:49 am
More

  ARTICLE - SECTIONS

  சோர்வு நீக்கும் சோம்பு!

  Anise - 1

  சோம்பு என்பது அபியேசியே குடும்பத் தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியைத் தாயகமாகக் கொண்டது.

  சோம்பு அதிமதுரம், அண்ணாசிப்பூ, மற்றும் பச்சடி வகையில் பயன்படுத்தப்படும் சில செடிகளுக்கு இணையான சுவையை உடையது.

  சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும்.
  குட்டையாக இருக்கும் இச்செடி 3 அடி (0.91 மீ) உயரமே வளரும் ஓராண்டுத் தாவரமாகும்.

  இத்தாவரத்தின் இலைகள் தண்டின் அடிப்பகுதியில் நீண்டும் சற்றே கதுப்பாக குழியுடையதாகவும் காணப்படும். ஆனால் தண்டின் மேற்பகுதியில் உள்ள இலைகள் பல இலைகளாகப் பிரிந்து ஒரு சிறகைப் போலக் காணப்படும். இதன் மலர்கள் வெண்மை நிறமுடையது. சுமார் 3 மி.மீ விட்டத்துடன் ஓர் அடர்ந்த குடை போல இருக்கும்.

  இதன் பழங்கள் உலர்ந்து 3 முதல் 5 மி.மீ வரை ஒரு நீள்வட்டமாக இருக்கும். இவை பொதுவாக சோம்பு விதைகள் என அழைக்கப்படுகின்றன.

  சோம்பு லேபிடோப்டேரா இனத்தைச் சேர்ந்த சிலவகைப் பூச்சிகளான வண்ணத்துப்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் உணவாகவும் பயன்படுகிறது

  ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும்.

  அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். தினமும் காலையில்
  காபி குடிப்பதற்கு
  பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும். சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும்.

  மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.
  சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சிரப்பியால் சுரக்கப்படும் ஹார்மோனை
  சீராக உற்பத்தி செய்து, நல்ல
  நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

  மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்..

  பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் சருமம் புத்துணர்வு பெற்று பிரகாசமாகிறது. சோம்பு ஒரு சிறந்த ரத்த சுத்திகரிப்பான். ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும். சோம்பு சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். பெருஞ்சீரகம் போட்டு ஆவி பிடித்தால், கண்களின் ஒளி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

  உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால், அரை டீஸ்பூன் சோம்பை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை மென்று சாப்பிடுங்கள். இது, வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

  சோம்பில் குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.

  பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போல குடிப்பது அஜீரணத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. பெருஞ்சீரகத் தேநீர் குடிப்பது இருமலை குணப்படுத்தும். அதோடு, பெருஞ்சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு அபாயம் குறையும்.

  மேம்பட்ட தோல் அமைப்புக்கு நீங்கள் பெருஞ்சீரகம் விதை நீராவி வழியையும் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்க்கவும். அதன் மேல் வரும் நீராவி உங்கள் முகத்தில் படுமாறு 5 நிமிடங்கள் உங்கள் தலை மற்றும் கழுத்தை ஒரு துண்டால் மூடி வைக்கவும்.

  வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்யுங்கள். சரும அழகிற்கு நீங்கள் சோம்பு மாஸ்க் பயன்படுத்தலாம். அரை கப் கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்க்கவும். 30 நிமிடங்கள் காத்திருந்து, அதில் ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் தேன் சேர்க்கவும். மென்மையான பேஸ்ட் செய்து உங்கள் முகத்தில் தடவவும். இதை 20 நிமிடங்கள் விடவும். வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
  விதைகள் பொடுகு, உச்சந்தலையில் அரிப்பு, முடி உடைப்பு மற்றும் முடி உதிர்தல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க உதவும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,465FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-