October 23, 2021, 12:12 am
More

  ARTICLE - SECTIONS

  சருமத்திற்கும், கூந்தல் பராமரிப்பிற்கும் டீ ட்ரீ ஆயில்!

  tea oil
  tea oil

  தேயிலை மர எண்ணெயானது அத்தியாவசியமான ஓர் எண்ணெய் வகையாக மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது. இந்த எண்ணெயானது ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரமான Melaleuca Alternifolia என்னும் மரத்தின் கிளைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும்.

  பல கிளென்சர்கள், பாம்கள், ஷாம்பூக்களில் டீ டிரீ எண்ணெய் இருப்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த எண்ணெய் ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டது.

  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் அபாரிஜின் பழங்குடிகள் டீ டிரீ மரத்தின் இலைகளிலிருந்து தேநீர் போன்ற சூடான ஒரு பானத்தை உருவாக்கினார்கள்.

  இந்த மரம் ஆற்று ஓரங்களில் வளர்ந்திருந்தது. இந்த மரத்தின் இலைகள் அபாரிஜின்கள் குளிக்கும் ஆற்றில் விழுந்தன. வெட்டுக்காயங்கள், நோய்த்தொற்றுகள் போன்றவற்றைக் குணப்படுத்தியதால், அந்த நீருக்கு மந்திரசக்தி இருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

  உண்மையில், அவை டீ டிரீயின் இலைகளே. பிறகு அவர்கள் இந்த இலைகளை வேக வைத்து, அவற்றிலிருந்து எண்ணெயை பிழிந்து எடுக்கத் தொடங்கினார்கள்.

  இதேமுறையில் தான் டீ டிரீ எண்ணெய் இன்றும் உருவாக்கப்படுகிறது. பல ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய ராணுவம், கடற்படையினரின் முதலுதவிப் பெட்டிகளில் டீ டிரீ எண்ணெய் ஆண்டிசெப்டிக் ஆக பயன்படுத்தப்பட்டது. இன்று, பெரும்பாலான சரும, கூந்தல் பராமரிப்பு தயாரிப்புகளில் இது உள்ளது.

  சருமத்துக்கான எண்ணெய்

  சுத்தமான டீ டிரீ எண்ணெய் வெளிர் மஞ்சள் கலரில் இருக்கும், ஜாதிக்காயைப் போன்ற வாசனையைக் கொண்டிருக்கும். டீ டிரீ எண்ணெயின் பயன்கள்

  இது ஒரு ஆண்டிசெப்டிக்: டீ டிரீ எண்ணெய் பாக்டீரியாக்களை கொல்கிறது. காயங்களை குணப்படுத்தி, சரும நோய்த் தொற்றுகளைக் குணப்படுத்துகிறது.
  அழற்சியைத் தடுக்கிறது: சூரிய புண்கள், கொப்புளங்களை சரிசெய்கிறது.

  பருக்களுக்கு நல்ல மருந்து: தினமும் தூங்குவதற்கு முன் கொஞ்சம் டீ டிரீ எண்ணெயை பருவின் மேல் பூசவும். சில நாள்களில் சருமம் தெளிவாகிவிடும்.

  தலைக்கு நல்லது: இந்த எண்ணெய் பொடுகையும்கூட தவிர்க்கும்.
  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: டீ டிரீ எண்ணெய் ஆஸ்துமா, டி.பி. நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது.
  எச்சரிக்கை

  டீ டிரீ எண்ணெயை எப்போதும் நீர்ம வடிவத்தில் பயன்படுத்த வேண்டும். தவறாக அப்படியே பயன்படுத்தியிருந்தாலோ, ஓவர் டோஸ் ஆகிவிட்டாலோ உடனே மருத்துவ ஆலோசனை பெறவும். அதற்கான அறிகுறிகள்: அதிக மயக்க நிலை, வயிற்றுப்போக்கு, வாந்தி, அரிப்பு, எரிச்சல்.

  டீ டிரீ எண்ணெயை நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போதும், பாலூட்டும்போதும் தவிர்க்கவும்.

  டீ டிரீ எண்ணெயை குழந்தைகள், செல்லப்பிராணிகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

  ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் நீர்த்துபோக செய்த பிறகு பயன்படுத்த வேண்டும். ஒரு சொட்டு டீ ட்ரீ ஆயிலுக்கு 12 மடங்கு இந்த கேரியர் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதே நேரம் கண்களை சுற்றி பயன்படுத்தும் போது மட்டும் கவனமாக இருங்கள்.

  ஏனெனில் இது சருமத்தில் வெளிப்பாடு சிவத்தல் மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இதை சருமத்துக்கு பயன்படுத்துவதற்கு முன்பு இது உங்கள் சருமத்தில் எதிர்வினை புரியாது என்பதை உறுதிபடுத்தி கொண்டு பயன்படுத்துங்கள்.

  சருமத்தில் வறட்சியும் எரிச்சலும் இருந்தால் அதை வெளியேற்ற டீ ட்ரீ ஆயில் உதவும். இதில் துத்தநாக ஆக்ஸைடு மற்றும் க்ளோபெட்டாசோன் ப்யூரேட் க்ரீம்களை விட நம்பகமான ஆதாரம் காட்டப்பட்டுள்ளது.

  தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் உடன் மற்ற அத்தியாவசிய எண்ணெயை கலக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி எடுக்கவும். நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது இதை செய்ய வேண்டும்.

  தேயிலை மர எண்ணெய் ஆன்டி செப்டிக் பண்புகள் சருமத்தை எதிர்த்து போராடும் திறன் கொண்டது. ஆய்வு ஒன்றில் தேயிலை மர எண்ணெயை கொண்ட சன்ஸ்க்ரீன் தொடர்ந்து 30 நாட்களுக்கு பயன்படுத்தியதில் அவர்களது சருமத்தின் எண்ணெய் தன்மை மேம்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

  தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் எடுத்து மாய்சுரைசர் அல்லது சன்ஸ்க்ரீனில் தடவவும். முகத்துக்கு பேக் பொடும் போது கலவையில் இரண்டு சொட்டு தேயிலை மர எண்ணெய் சேர்க்கவும்.

  ​சரும நமைச்சல்
  தேயிலை மர எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு சருமத்தின் அசெளகரியத்தை போக்க உதவும். சருமத்தின் அரிப்பு ஏற்படுத்தும் நோய்த்தொற்றூகளை குணப்படுத்த உதவும்.

  2012 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில் தேயிலை மர எண்ணெய் அரிப்பு, கண் இமைகளில் உள்ள எரிச்சலை குறைப்பதற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 5 % தேயிலை மர எண்ணெய் கொண்ட க்ரீம் ஒன்று 24 பேர் கொண்ட ஆய்வில் பரிசோதிக்கப்பட்டது. முடிவில் 16 பேர் தங்கள் அரிப்புகளை முற்றீலுமாக அகற்றப்பட்டதாக தெரிவித்தனர். எஞ்சிய 8 பேர் தோல் அரிப்புகளில் குறைந்ததை உறுதிபடுத்தினார்கள்.

  தேயிலை மர எண்ணெய் சில துளிகள் எடுத்து மாய்சுரைசர் அல்லது கேரியர் எண்ணெயில் கலந்து முகத்தில் தடவினால் இவை குறையும்.

  ​சொரியாசிஸ்

  தடிப்பு தோல் அழற்சிக்கு தேயிலை மர எண்ணெய் பயன்படுத்துவது நன்மை தரும். இது குறித்த ஆய்வுகள் குறைவு என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதே நேரம் இது தொற்று மற்றும் அழற்சி போன்ற தடிப்புத் தோல் அழற்சியின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இவை உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

  ஒன்று அல்லது இரண்டு துளி தேயிலை எண்ணெயை சிறிதளவு அத்தியாவசிய எண்ணெய் உடன் கலந்து நீர்த்து செய்து தடவி வந்தால் இந்த சரும தடிப்பு சரியாக கூடும்.

  ​காயத்தை குணப்படுத்துகிறது
  சருமத்தில் நோய்த்தொற்றூகள், வெட்டுகள், காயங்களை குணப்படுத்தவும் தேயிலை மர எண்ணெய் உதவுகிறது முகப்பருக்களால் உண்டாகும் கரும் புள்ளிகள் வடுக்களையும் போக்க செய்யும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் காயங்களை குணப்படுத்த கூடும்.!

  2013 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றின்படி தேயிலை மர எண்ணெய் பாக்டீரியாவால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த செய்கிறது என்பது கண்டறியப்பட்டது. ஆய்வு ஒன்றில் 10 பேரில் 9 பேர் வழக்கமான சிகிச்சையோடு ஒப்பிடும் போது இது குணப்படுத்தும் நேரத்தை குறைத்தது கண்டறியப்பட்டது.

  காயங்களுக்கு பயன்படுத்தப்படும் களிம்புகளில் ஒரு துளி டீ ட்ரீ ஆயில் விட்டு அதை தடவி வந்தால் காயம் ஆற கூடும்.

  தேயிலை மர எண்ணெய் மாஸ்க்
  தேயிலை மர எண்ணெய் – சில துளி

  முல்தானி மட்டி – கால் ஸ்பூன்

  நீர் – தேவையன அளவு

  முல்தானி மட்டி அல்லது வேறு ஏதாவது க்ளே பவுடரில் 3 துளி தேயிலை மர எண்ணெய் மற்றும் கலக்க தேவையான நீர் சேர்த்து பேஸ்ட் போல்ச் செய்து அதனை முகத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இரண்டாவது முறையிலேயே மாற்றம் தெரியும்.

  ப்ளீச்சிங் :
  ஜுஜுபா எண்ணெய்

  தேயிலை மர எண்ணெய்

  தக்காளி விழுது

  ஜுஜுபா எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் இர்ண்டையும் சில துளிகல் எடுத்து அவற்றுடன் தக்காளியின் சதைப்பகுதியை பசித்து முகத்தில் குறிப்பாக கரும்புள்ளி இருக்குமிடத்தில் தேய்த்து சில நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். விரைவில் பலன் தெரியும்.

  ஃபேஸ் வாஷ் :
  நீருடன் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து முகத்தில் கழுவு வந்தால் விரைவில் கரும்புள்ளி மறைந்து சருமம் சுத்தமாகும்.

  ஃபேஸியல் ஸ்க்ரப் :
  சர்க்கரை

  ஆலிவ் எண்ணெய்

  தேயிலை மர எண்ணெய்

  சர்க்கரை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து அவற்றில் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து முகத்தில் தேய்த்து கழுவுங்கள். இவை சரும சுருக்கங்களை , கரும்புள்ளியை போக்கி, மிருதுவாக்கும்.

  குளியல் :
  குளிக்கும்போது ஒரு டப் நீரில் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து அந்த நீரில் குளித்தால் சரும பிரச்சனைகள் மறைந்து சருமம் புத்துயிர் பெறும்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,578FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-