spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுமருதாணியின் மகத்தான பயன்கள்!

மருதாணியின் மகத்தான பயன்கள்!

- Advertisement -
Hyssop
Hyssop

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.

மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.

மருதாணி புதர்ச்செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும். நடுத்தரமான அல்லது பெரிய அதிகமான கிளைகளுடன் கூடிய தாவரமாகும். மருதாணி இலைகள் ஈட்டி வடிவமானவை. நான்கு கோணங்களுடன் எதிர் எதிராக 2-3 செமீ நீளத்தில் அமைந்திருக்கும்.

மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

மருதாணி பழங்கள் சிறியவை. பட்டாணி அளவில் பல விதைகளுடன் காணப்படும். அழகுக்காகவும், அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும்.

இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

அதிகளவில் முடி உதிர்வது, இளநரை, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீர சுத்தமான தேங்காய் எண்ணையில் தேவையான அளவு மருதாணி இலைகளை போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை தலைக்கு தடவி வர மேற்கண்ட அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் தீரும்.

6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும். கைகளில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கி கைகள் மிருதுவாகும். உடல் அதிகம் உஷ்ணமாவதை தடுக்கும். மன அழுத்தங்களை குறைக்கும். மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகசுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

மனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறையும். காயம் சீக்கிரம் ஆறுவதுடன் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

Henna plant
Henna plant

மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சாற்றை தீராத வயிற்று போக்கு சீதபேதி பாதிப்பு கொண்டவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.

மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். சிலருக்கு ஜுரம் போன்றவற்றால் தலைவலி ஏற்படுகிறது. மைக்ரேய்ன் எனப்படும் ஒற்றை தலைவலியும் உண்டாகிறது. மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவி வந்தால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சனைகளும் தீரும்

மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

மருதாணி இலைகளை நன்கு அரைத்து அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் தோலில் பூசி வந்த போது தோலில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி, தோலில் மிருதுத்தன்மையை அதிகரித்து ஒருவருக்கு இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது என கண்டறியபட்டுள்ளது. சொறி சிரங்கு போன்ற தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணமாக மருதாணி இலை சாறு மற்றும் எண்ணெய் இருக்கிறது.

மருதாணி இலையில் இருந்து பெறப்பட்ட மருதாணி எண்ணையை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து, நரம்புகளை குளிர்ச்சியாக்கி தூக்கமின்மை பிரச்சனை நீங்குகிறது.

கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்ற கொஞ்சம் மருதாணி இலைகளை, தூய்மையான தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற அனைத்து உறுப்புகளில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறி இவ்வுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

ரத்த அழுத்தம்
மருதாணி இலைகள் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தும் சமசீரான அளவில் இருக்க செய்கிறது. இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு உண்டு. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள் மருதாணி இலை தண்ணீரை பருகி வருவது நல்லது.

வீக்கம்
உடலில் சில பாகங்களில் சமயத்தில் சுளுக்கு ஏற்பட்டு அந்த இடம் வீங்கி விடுகிறது. வாதம் சம்பந்தமான பாதிப்புகள் கொண்டவர்களுக்கும் உடலின் மூட்டு பகுதிகளில் விறைப்பும், வீக்கமும் ஏற்படுகின்றன. மருதாணி இலைகளில் இருந்து பெறப்படும் எண்ணையை வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி வருபவர்களுக்கு வீக்கங்கள் விரைவில் வற்றும்.

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

மருதாணி இட்டுக் கொண்டவதால் சிலருக்கு சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம்.

மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வரவிரைவில் கருந்தேமல் மறையும்.

தோல் அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு இந்த இலையை சாத்த்துடன் இரவு ஊறப் போட்டுக் காலையில் வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும்.

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். மருதாணியின் வேர்ப் பட்டையை அரைத்து காலில் ஆணி, புண்கள் உள்ள இடத்தில் தடவினால் புண்கள் குணமாகும்.

வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழர்ஜி நீக்கி பொருளாகவும் பயன்படுத்தலாம். அதன் இலைகளை அரைத்து வழுதாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை கழுவி விடுங்கள். வீக்கம் மெதுவாக வற்ற ஆரம்பிக்கும். பேஸ்ட் வடிவில் இருக்கும் மருதாணி இலைகளை உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

அனைத்து வகை தலைமுடி பிரச்சனைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதானை இலைகளை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் உங்கள் முடிகளை சரி செய்து மீண்டும் பொலிவை பெறச் செய்யும்.

தோல் அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு இந்த இலையை சாத்த்துடன் இரவு ஊறப் போட்டுக் காலையில் வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும்.

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலையை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்..

வெள்ளிக்கிழமைகளில் மருதாணி இலை புகைப்போடுவதால் துஷ்டத்தேவதைகள் விலகும்.

மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.

இலையுடன், படிகாரமும் சேர்த்து அரைத்து அதன் விழுதை, கருந்தேமல், படைகள், கால்வலி, நரம்பு இழுப்பு உள்ளவர்கள் தேய்த்து வர இந்நோய்கள் நீங்கும். இலையை உள்ளங்காலில் தேய்த்தால் கண் எரிச்சல் நீங்கும்

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe