
தினை கீரை சூப்
தேவையான பொருட்கள்:
தினை – ஒரு டேபிள்ஸ்பூன், மணத்தக்காளிக்கீரை – ஒரு கைப்பிடி அளவு,
தக்காளி- ஒன்று (நறுக்கவும்), பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கவும்), பூண்டு – 4 பல்,
சீரகத்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – தேவைக்கேற்ப,
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தினை, பாசிப்பருப்பைத் தண்ணீர்விட்டுக் களையவும். பிறகு இவற்றை குக்கரில் சேர்க்கவும். இவற்றுடன் மணத்தக்காளிக்கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள், சீரகத்தூள், நல்லெண்ணெய், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பத்து விசில்விட்டு இறக்கவும். பிறகு நீரை வடித்து அதை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதமிருக்கும் தினை – பருப்பு கலவையை நன்கு கரண்டியால் கடைந்துகொள்ளவும். இப்போது வடித்து எடுத்துவைத்துள்ள நீரைக் கடைந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடைசியாக இந்தக் கலவையை வடிகட்டி, அதில் மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்தும் அருந்தலாம்.