Home அடடே... அப்படியா? எந்த மொழியும் சொந்த மொழியே! அமர்க்களப் படுத்தும் Zoom!

எந்த மொழியும் சொந்த மொழியே! அமர்க்களப் படுத்தும் Zoom!

கொரோனா காலக்கட்டம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஜூம் செயலி மற்றும் கூகுள் மீட் பெரிதளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஜூம் செயலி தொடர்ந்து பல்வேறு புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல தரப்பு நபர்களுடன் வீடியோ கால் மேற்கொள்ளும் போது அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை மொழி சிக்கல். அதை தற்போது சரி செய்யும் வகையில் டிரான்ஸ்லேஷன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

நிகழ்நேர மொழிபெயர்ப்பு அம்சம்
12 மொழிகளுக்கான நிகழ்நேர மொழிபெயர்ப்பு அம்சங்கள் ஜும் செயலியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எந்த 12 மொழிகளை ஆதரிக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.

zoom

ஜூம் செயலி என்பது பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஜூம் அதன் வருடாந்திர Zoomtopia மாநாட்டில், ஜூம் அழைப்புகளுக்கான நிகழ்நேர பலமொழி டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் மொழிபெயர்ப்பு பயன்பாட்டை விரைவில் இணைப்பதாக அறிவித்தது.

மொழி தடைகளை குறைக்க புது அம்சம்
புதிய நிகழ்நேர மொழிபெயர்ப்பு அம்சம் ஆனது வீடியோ அழைப்புகளின் போது மொழி தடைகளை குறைக்க உதவுகிறது. இந்த நேரடி மொழிபெயர்ப்பு அம்சம் ஆனது 12 மொழிகளில் இயங்க இருக்கிறது. அதோடு பல புதிய அம்சங்களை அறிவித்து வருகிறது.

ஜூம் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு ஆற்றப்பட்ட வழிமுறைகள், இயந்திர கற்றல் ஆகியவையின் மூலம் பேச்சாளர்களின் கருத்தை உரையாக மாற்ற அனுமதிக்க இருக்கிறது.

மேலும் ஜும் தானியங்கி டிரான்ஸ்கிரிப்ஷனை 30 மொழிகளில் நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி அடுத்த ஆண்டில் 12 மொழிகளின் நேரடி மொழிபெயர்ப்பை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மொழிகளில் கலந்துரையாடி கருத்துகளை பரிமாற்ற வேண்டிய சூழல் நிலவி வரும் இந்த சமயத்தில் வீடியோ காலில் லைவர் டிரான்ஸ்லேஷன் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன்களை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

முதற்கட்டமாக 12 மொழிகளில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. ஜூம் நிறுவனத்தின் இந்த அம்சம் அடுத்த ஆண்டுக்குள் வரும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம் ஆனது பயனர்களின் மொழி தடைகளை குறைக்க அனுமதிக்கிறது. இதில் இருக்கும் செயற்கை நுண்ணரிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் பேசுபவரின் கருத்தை உரையாக மொழிபெயர்த்து காண்பிக்க அனுமதிக்கிறது.

முதற்கட்டமாக 12 மொழிகளில் அறிமுகமாகும் இந்த அம்சம் அடுத்தடுத்து பல மொழிகளில் உயர்த்த அனுமதிக்கிறது. ஜூம் செயலியானது சமீபத்தில் கைட்ஸ் என்ற டிரான்ஸ்லேஷன் நிறுவனத்தை வாங்கியது. நிறுவனத்தை வாங்கிய இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஜூம் செயலியில் சமீபத்தில் ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

translate

பள்ளியில் மாணவர்கள் பயிலும் போது அனைவரின் கவனமும் ஆசரியர்களை நோக்கியே இருக்கும். ஆனால் ஆன்லைன் வகுப்பின் போது டிஸ்ப்ளேவில் அனைத்து மாணவர்களும் நேரில் சந்தித்துக் கொள்கின்றனர். இதனால் கவனச் சிதைவு ஏற்படுவதோடு ஆசிரியர்களுக்கு பாடம் எடுப்பதும் சிரமமாக இருக்கிறது.

Focus Mode என்ற புதிய அம்சம் இதையடுத்து மாணவர்கள் ஆசிரியர்களை மட்டுமே எதிர்கொள்ளும் வகையில் புதிய அம்சத்தை ஜூம் செயலி கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய அம்சமானது Focus Mode ஆகும். இதன் மூலம் அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் பார்க்கலாம், அனைத்து மாணவர்களும் ஆசரியர்களை மட்டுமே பார்க்க முடியும். இந்த அம்சத்தை அப்டேட் செய்வதன் மூலம் ஆசிரியர்கள், ஹோஸ்ட் மற்றும் கோ ஹோஸ்ட் ஆகியோர் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version