பனீர் கீர்
தேவையானவை:
பால் – அரை லிட்டர்,
பனீர் – 250 கிராம்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
முந்திரி – 10,
சர்க்கரை – அரை கப்,
நெய் – ஒரு டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) கண்டன்ஸ்டு மில்க் – கால் கப்.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அடுப்பை சிறு தீயில் வைத்துவிட்டு, பனீரைத் துருவவும். பால் நன்கு கொதித்து பாதியாக சுண்டி வரும்போது பனீர் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். (விருப்பப்பட்டால்) கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால்… பனீர் கீர் ரெடி! முந்திரியை ஒன்றிரண்டாக உடைத்து நெய்யில் வறுத்து கீர் மீது சேர்த்துப் பரிமாறவும்.