December 6, 2021, 10:12 am
More

  அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

  health tips 1
  health tips 1

  ஊது காமாலைக்கு…

  கோவை இலைகளை கத்தம் செய்து கசக்கிப் பிழிந்து சாறெடுத்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு கொடுத்து வர வீக்கம் வடிந்து குணமாகும்.

  உடலில் படையா?

  தினசரி குளித்த பிறகு துளசி சாறு தேய்த்து வர எரிச்சல் கொடுத்தாலும் ஐந்தாறு நாள்களில் சரியாகி விடும்.

  உள்ளங்கை சொரசொரப்பு நீங்க…

  எலுமிச்சம்பழச் சாற்றை தேய்த்து வந்தாலே சில நாள்களில் உள்ளங்கை சொர சொரப்பு நீங்கி மிருதுவாகி விடும்.

  உண்ணிகள் நீங்க…

  சிலருக்கு முகம், கழுத்து. கண், இரைப்பை இவற்றில் உண்ணிகள் வளர்ந்து முகத்தையே விகாரப்படுத்திவிடும். அதைப்போக்க நாயுருவி இலை ஒரு கைப்பிடி, ஒரு சுண்டைக்காயளவு சுண்ணாம்பு, இரண்டு குண்டுமணியளவு வாஷிங் சோடா இம்மூன்றையும் சேர்த்து வைத்து உண்ணிகள் மீது போட ஒரு வாரத்தில் உதிர்ந்து விடும்.

  இரணக்கள்ளியை இடித்து சாறு எடுத்து பாலுண்ணி. மருவு ஆகியவற்றுக்கும், கால் ஆணி, சொர சொரப்பான மருக்கள் மேல்
  இரவு நேரம் தடவிவர அவை குணமாகும்.

  எரிச்சலும் கண் நோயும்

  ஆவாரம் பூ சர்பத் தயாரித்து சாப்பிட்டு வர ஆண் பெண் உறுப்புகளின் எரிச்சல் நீங்கிச் சாந்தப்படும். ஆவாரம் பூவை வதக்கி, படுக்கைக்குப் போகுமுன் கண்களில் வைத்துக் கட்ட கண் நோய்கள் நீங்கும்.

  சம்பங்கிப்பூ கண் நோய்களை குணப்படுத்த வல்லது. இப்பூவின்
  சாற்றையெடுத்து கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வாருங்கள்.

  கண்கள் சிவந்து வலிக்கிறதா? ஆடா தொடைப் பூக்களைக் கொண்டு வந்து சுத்தம் செய்து கண்களின் மேல் வைத்துக் கட்ட வேண்டும். மூன்று தடவை கட்டினால் போதும் சரியாகிவிடும்.

  *இரவில் கண் தெரியாமல் அவதிப்படுவோர் கருந்துளசிச் சாற்றை இரண்டு துளிகள் கண்களில் விட்டுக் கொண்டால் நல்ல குணம் தெரியும்.

  கண் வலி வராமலிருக்க: எள்ளின் பூவைப் பறித்து பல்வில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனைப் பூக்களைத் தின்கிறீர்களோ அத்தனை வருடங்கள் கண் வலி வராது.

  கண்களில் நீர் வழிந்தால் சுத்தமான பன்னீரினால் கண்களைக் கழுவ சீக்கிரம் குணம் தெரியும்.

  *ஆப்பிளை தேனில் நனைத்து சாப்பிட சில வாரங்களில் கண்களுக்கு நல்ல அழகும் சிறந்த ஒளியும் உண்டாகும்.

  எலிக்கடிக்கு…

  வெள்ளெருக்கன் இலையை அரைத்து ஒரு கோலி குண்டு அளவு சாப்பிட்டு விட்டு அத்துடன் அதைக் கடிவாயிலும் வைத்துக் கட்டி வந்தால் புண்ணும் ஆறிவிடும்.

  ஐந்தாம் மாதத்திலே…

  • கர்ப்பிணிகளுக்கு ஐந்தாம் மாதத்தில் வயிறு வலித்தால் ஆம்பல் பூவும். விளாமிச்சம் வேரும் அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சிக் குடிக்க வலி தீரும்.

  ஒற்றைத் தலைவலிக்கு…

  திராட்சைப் பழத்தை சாறு பிழிந்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாவதுடன் உடல் வலி நீங்கி உடலும் பலம் பெறும்.

  வெள்ளை எள்ளை, எருமைப்பால் சேர்த்து அரைத்தெடுத்து அதிகாலை யில் முன் நெற்றியில் பற்றுப் போட்டு உதய சூரியன் ஒளியில் இலேசாகக்காட்டி வர மூன்றே நாள்களில் தலைவலி ஓடிவிடும்.

  ஆரஞ்சுப் பழத்தோலை அழுத்தினால் ஒரு விதச் சாறு கசியும் ஓர் இறகினால் அதை எடுத்து இரண்டு காதுகளுக்குள்ளும் தடவி விட மறு நிமிடத்திலிருந்தே வலி குறைந்து குணமாகிவிடும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,799FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-