spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?உங்க வேலையை எளிதாக்கும் கூகுள் ஃபோகஸ் டைம்!

உங்க வேலையை எளிதாக்கும் கூகுள் ஃபோகஸ் டைம்!

- Advertisement -
google
google

கூகுள் நிறுவனம் வேலை இடங்களில் கவனச் சிதறலை தடுக்கும் விதமாக கூகுள் காலண்டரில் ஃபோகஸ் டைம் (Focus Time) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் யூசர்களின் பயன்பாட்டைப் பொறுத்து புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இருக்கும் செயலிகளில் வசதிக்கேற்ப புதிய ஆப்சன்களையும் மேம்படுத்துகிறது. அந்தவகையில் கூகுள் காலண்டரில் புதிய அம்சம் அறிமுகப்படுப்படுத்த உள்ளதாக அக்டோபர் 20ஆம் தேதி அறிவித்தது.

Focus Time என்ற இந்த புதிய வசதி ஆபீஸ் மற்றும் பள்ளிக், கல்லூரி சூழல்களில் பணியாற்றுபவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

பல்வேறு வேலைப்பாடுகள், மீட்டிங் மற்றும் நிகழ்வுகள் தொடர்ந்து திட்டமிடப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில், ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் அல்லது மற்ற நிகழ்வுகளுக்கான பணிகளை செய்ய முடியாமலும் போக வாய்ப்புள்ளது.

அப்போது, ஃபோகஸ் டைமில் ஆக்டிவேட் செய்து வைத்தால் ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளுக்கான நேரத்தை ஒதுக்க முடியாது. உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்டிங் குறித்தும் எடுத்துரைப்பதுடன், மற்ற மீட்டிங் குறித்த தகவல்களை குறிக்கும்போது நிராகரித்துவிடும்.!

இதனால், ஒரு வேளையில் முழுமையாக கவனத்தை செலுத்துவதற்கு இந்த மேம்படுத்தப்பட்ட ஆப்சன் உதவியாக இருக்கும். கூகுள் காலண்டர் ஃபோகஸ் டைம் ஆப்சனில், பதிவு செய்த மீட்டிங் நேரத்துக்கு ஏற்ப கலர்களும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும்.

இதன் அடிப்படையில், அடுத்த நிகழ்வுக்கு தயாராவதற்கு இந்த நிறங்களும் உங்களுக்கு ஒரு சமிக்கை ஆகும். போகஸ் டைமை ஆன் செய்துவிட்டால், காலண்டரில் சிறிய ஹெட்போன் போன்ற குறியீடு காண்பிக்கும்.

இந்த குறியீட்டை கிளிக் செய்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கான நேரத்தையும், வணத்தின் அடிப்படையில் வேறுபடுத்தி காட்டும்.

அர்ப்பணிப்புடன், முன்னெச்சரிக்கையாகவும் இருப்பதற்கும் கூகுள் காலண்டர் ஃபோகஸ் டைம் உதவியாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

focus time
focus time

அவுட் ஆப் ஆஃபீஸ்போல் செயல்படும் என விளக்கமளித்துள்ள கூகுள், இதனை கட்டுப்படுவதற்கென செட்டிங்ஸ் இல்லை எனக் கூறியுள்ளது. இதனை யூசர்களே மேனுவலாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என கூறியுள்ளது.

ஒரே நேரத்தில் இருவேறு மீட்டிங்குகளை நிராகரிப்பதற்கு கூகுள் போகஸ் டைம் செட்டிங்ஸில் பிரத்யேகமாக ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூசர் அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

கூகுள் காலண்டரில் Focus Time செட் செய்வது எப்படி?

முதலில் கூகுள் காலண்டரை ஓபன் செய்ய வேண்டும்

ஃபோகஸ் டைம் எப்போது இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள்

ஃபோகஸ் டைமில் நிகழ்வின் தொடக்க நேரத்தை கிளிக் செய்து, பின்னர் சேமிப்பு பட்டனை அழுத்துங்கள்.!

இப்போது, உங்களின் கூகுள் ஃபோகஸ் டைம் ஆக்டிவேட் ஆகியிருக்கும். கடந்த புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள கூகுள் ஃபோகஸ் டைம், யாருக்கெல்லாம் உபயோகமானதாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் வொர்க்ஸ்பேஸ் பிசினஸ் ஸ்டாண்டர்ட், பிசினஸ் பிளஸ், எண்டர்பிரைஸ் ஸ்டாண்டர்ட், எண்டர்பிரைஸ் பிளஸ், கல்வி அடிப்படைகள், கல்வி கற்பித்தல் மற்றும் கற்றல் மேம்படுத்தல், கல்வி தரநிலை, கல்வி பிளஸ் மற்றும் இலாப நோக்கற்ற வாடிக்கையாளர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே இந்த ஆப்சன் பயன்படுத்த முடியும் என்றும் வரையறுத்துள்ளது.

இது Google Workspace Essentials, Business Starter, Enterprise Essentials, Frontline மற்றும் G Suite Basic மற்றும் Business வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe