Home தொழில்நுட்பம் கேலக்ஸி எஸ் 21 எப்இ: சிறப்பம்சங்கள்!

கேலக்ஸி எஸ் 21 எப்இ: சிறப்பம்சங்கள்!

Galaxy S21 FE
Galaxy S21 FE

சாம்சங்க் பிரியர்களுக்கு கேலக்ஸி எஸ்21 FE அறிமுகமாகும் தேதி குறித்த விவரம் வெளியாகியுள்ளது

சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 சீரிஸில் அடுத்ததாக கேலக்ஸி எஸ் 21 எப்இ மாடலை சாம்சங்க் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடலுக்கான வெளியீட்டு தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

இதுவரை பலமுறை அறிமுகப்படுத்தும் தேதிகள் வெளியாகி, அனைத்தும் வதந்திகளாக மாறிவிட்டன. ஆனால், சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப்இ -யின் அறிமுகம் இந்தமுறை தவறாது என டெக் உலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது. இப்போ வருகிறது, அப்போது வருகிறது என முரண்பட்ட தகவல்கள் சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 எப்இ மீதான எதிர்பார்ப்பை குறைத்துள்ளன எனலாம்.

இருப்பினும், அந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் பியூச்சர்ஸ் மற்றும் அதன் அறிமுகத்தை தெரிந்து கொள்வதில் இன்னும் பலருக்கு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களான ஸ்வீட் தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

அதாவது சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 எப்இ மாடல் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை SamMobile வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அமெரிக்காவில் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் (CES) நடைபெறுகிறது.

லாஸ்வேகாஸ் நெவாடாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 எப்இ அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

உலகளாவிய டெக் சந்தையில் ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு கேலக்ஸி எஸ்21 எப்இ மாடல் தாமத்திற்கு முக்கிய காரணம். இந்த தட்டுப்பாட்டால் கேலக்ஸி எஸ் 22 சீரிஸை அறிமுகப்படுத்தும் அந்நிறுவனத்தின் திட்டமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

மற்ற சில தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப்இ ஜனவரி வரை அறிமுகப்படுத்த சாத்தியமில்லை என கூறுகின்றன. பிப்ரவரியில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அந்த தகவல்கள் கூறுகின்றன.

சாம்சங்க் கேலக்ஸி எஸ்21 எப்இ மாடல், கேலக்ஸி எஸ் 21 மாடலை ஒத்த வகையில் பல்வேறு அம்சங்களை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

Samsung Galaxy S21 FE சிறப்பம்சங்கள் :

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன், Qualcomm Snapdragon 888 செயலி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.4-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் இருக்கலாம். ஜெர்மன் நாட்டின் சாம்சங்க் இணையதளத்திலும் இந்த ஸ்மார்ட்போன், SM-G990B/DS மாதிரி எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.!

எண்ணில் உள்ள ‘DS’ ஸ்மார்ட்போனின் இரட்டை சிம் திறனைக் குறிக்கிறது. 32எம்பி முதன்மை, 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 8எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்புடன் ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன், 4,500mAh பேட்டரி மற்றும் 45W மற்றும் 25W வேகமான சார்ஜிங் ஸ்பீடு இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version