புடலை – பூசணி தீயல்
தேவையானவை:
புடலங்காய், பூசணிக்காய் துண்டுகள் (சேர்த்து) – ஒரு கப்,
பொடித்த வெல்லம், மஞ்சள்தூள்,
உப்பு – சிறிதளவு.
அரைக்க: தனியா – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப),
தேங்காய் – அரை மூடி (துருவவும்), பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய் – சிறிதளவு,
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் (கிள்ளியது) – 2, கறிவேப்பிலை – சிறி தளவு,
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
புடலங்காய், பூசணிக்காய் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு நீரை வடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைத்து, காயுடன் கலந்து கொதிக்கவிட்டு, வெல்லம் சேர்த்து இறக்கவும். தாளிக்கும் பொருட்களை தேங்காய் எண்ணெயில் சிவக்க தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.