தோசைக்காய் துவையல்
தேவையானவை:
மிகவும் பொடியாக நறுக்கிய தோசைக்காய் – ஒரு கப்,
கொத்தமல்லி – அரை கட்டு (நறுக்கவும்), மஞ்சள்தூள், உப்பு, – தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
கடுகு, பெருங்காயம், வெந்தயம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப)
பூண்டு – 2 பல்,
புளி – நெல்லிக்காய் அளவு,
கறுப்பு உளுந்து – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
நறுக்கிய தோசைக்காயில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பிசிறி வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் வறுத்து… நறுக்கிய கொத்தமல்லி, சிறிதளவு நீர்சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தோசைக்காய் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சாதம், இட்லி, தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன்.