
பூசணி – கடலைப்பருப்பு இனிப்புக் கறி
தேவையானவை:
பூசணிக்காய்த் துண்டுகள் – ஒரு கப், வேகவைத்த கடலைப்பருப்பு – கால் கப், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு,
பொடித்த வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து… வேகவைத்த கடலைப்பருப்பு, பூசணிக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
இதனை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.