Homeலைஃப் ஸ்டைல்விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

vivo Y21e - Dhinasari Tamil

விவோ நிறுவனம் விரைவில் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதனம் 2400×1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும்.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்படும்.

பின்பு செல்பீகளுக்கும்,கால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும்.

புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். அதேபோல் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்‌ வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த
புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y21eஸ்மார்ட்போனின்
அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி Halo Full View டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 720×1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Y21e ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

அதேபோல் எல்இடி பிளாஷ், போர்ட்ரெய்ட் மோட், சூப்பர் HDR மற்றும் ஃபேஸ் பியூட்டி மோட் போன்ற பல கேமரா அம்சங்களை வழங்குகிறது இந்த சாதனம்.

இந்த விவோ Y21e ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விவோ Y21e ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த புதிய விவோ Y21e ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. விவோY21e ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் க்ளோ மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் கிடைக்கும்.

அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடலை ரூ.12,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தை விவோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில ஆஃப்லைன் தளங்களில் வாங்க முடியும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,542FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...

Exit mobile version