
பாலக்கீரை சாதம்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கப்
வெண்ணெய் / நல்லெண்ணை – 3 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
ப.மிளகாய் – 2 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
உப்பு – தேவையானளவு
அரைக்க
பாலக்கீரை – 1 கட்டு
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5 பற்கள்
முந்திரி – 5
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சீரகம் – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு – சிறிதளவு
செய்முறை
அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் சிறிது வெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான பாலக்கீரை சாதம் தயார்.