
பீர்க்கங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
பரிமாறும்: 2
பீர்க்கங்காய் : 1
மிளகாய் : 1
பாசி பருப்பு : ½ கப்
இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
சாதம் : 1 கப்
மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
வெங்காயம் : 1
தாளிக்க
கடுகு : ½ மேஜைக்கரண்டி
சீரகம் : ½ மேஜைக்கரண்டி
கருவேப்பிலை : சிறிதளவு
சிவப்பு மிளகாய் : 1
செய்முறை
பீர்க்கங்காய் தோல் நீக்கி வெட்டி வைத்து கொள்ளவும்
குக்கரில் பீர்க்கங்காய் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம், கருவேப்பிலை , சிவப்பு மிளகாய் தாளித்து கொள்ளவும் .
அதனுடன் மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .
அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் பீர்க்கங்காய் சேர்க்கவும் . பின் மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
பின் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்