- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் இந்த ராகு – கேது பெயர்ச்சி… உங்களுக்கு எப்படி இருக்கும்..?!

இந்த ராகு – கேது பெயர்ச்சி… உங்களுக்கு எப்படி இருக்கும்..?!

இந்த ராகு - கேது பெயர்ச்சி… உங்களுக்கு எப்படி இருக்கும்..?!

இந்த ராகு – கேது பெயர்ச்சி… உங்களுக்கு எப்படி இருக்கும்..?!

பங்குனி மாதம் 7 ம் தேதி பகல் மணி 02-52 க்கு ரிஷப ராசியிலிருந்து பின்னோக்கி சென்று கார்த்திகை1ம் பாதத்தில் மேஷ ராசிக்கு செல்கிறார். இதைப் போல் கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து விசாகம் 3ம் பாதத்தில் சென்று துலா ராசிக்கு செல்கிறார். இவை வாக்கிய பஞ்சாங்கப் படி.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி 30ஆம் தேதி பெயர்ச்சி உள்ளது. இரண்டும் ஒருபக்கம் இருக்கட்டும்

பங்குனி 30க்கு பிறகே எப்படி இருக்கும் என்ற பார்வையில் செல்வோம். இந்த ராகு கேது பெயர்ச்சி யாருக்கெல்லாம் சிறப்பாக இருக்கும் யாருக்கெல்லாம் நன்மை தீமையை கொடுக்கப் போகிறார் பார்ப்போம்.

ராகு கேது பொதுவாக 3-6-11ல் இருந்தால் சிறப்பு. அப்படி பார்க்கும் போது இந்த பெயர்ச்சி ராகு பகவான் கால புருஷ தத்துவத்தில் மூன்றாவதாக இருக்கும் மிதுனம் மற்றும் எட்டாமிடமாகிய விருச்சிகம் மற்றும் பதினொன்றாமிடமாகிய கும்பம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்ததொரு பலனை வாரி வழங்குவர். சரி அடுத்து கேது பகவான் அவர் எந்த ராசிக்கெல்லாம் சிறந்தபலனை வழங்குவார் என்று பார்க்கையில் கால புருஷ தத்துவத்தில் ஐந்தாமிடமாகிய அதாவது பூர்வபுண்ணியஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடம் சிம்மம் மற்றும் அர்த்த திரிகோணமாகிய அதாவது காலபுருஷனுக்கு இரண்டாம் வீடாகிய ரிஷபம் மற்றும் தனுசு ராசிக்கு கேதுபகவான் நன்மை செய்வார்.

ராகுவைப் பற்றி பார்ப்போம்! பாதி உடல் கொண்டவன் பெரும் வீரதீரன். சந்திரர்சூரியர்களைப் பிடிக்கும் வல்லமை கொண்டவன். அசுரர் குல ஸ்திரியின் கருவில் உதித்தவன் அப்படிப் பட்ட ராகுவை வணங்குகிறேன் என்கிறது ஸ்லோகம்.

அரசாங்கத்தில் பதவி புகழ் இவற்றை வழங்குவதற்கும், ஆற்றலைஅடைவதற்கும் உதவி செய்யக்கூடிய கிரகம் ராகு. உலகியல் காரியங்களில் அறிவைத் தருவான், உள்ளத்தில் தெளிவைத் தருவான். ஊர் சுற்ற வைப்பான், அதாவது வீண் அலைச்சல். இப்படியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்துலக பயணம் மேற்கொள்ள வைப்பான். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலம் ஏற்பட்டிருக்குமானால் ராகு உயர்வைத் தருவான்.

உயர்வைத் தந்தாலும் அந்த உயர்வுக்கு ஏமாற்றுதல் பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவை அடிப்படைக் காரணமாக அமையும்.

வல்லமை பெற்ற ராகு ஒரு ஜாதகருக்கு அதாவது ஆண் மகனுக்கு ராகு தசையோ புத்தியோ ஏற்படுமாயின் பெண்களால் சுகத்தையும் செல்வத்தையும் கொடுத்து, பின்பு சில இன்னல்களையும் கொடுத்து விடுவதும் உண்டு. ஆனால் ராகு திசை ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் இளமைப் பருவத்தில் வரக்கூடாது. அப்படி வந்தால் பிரம்மாண்டமாக செய்ய வைக்கும் காரியங்களை அதோடு அதற்கான இன்னல்களையும் கூடவே கொண்டு வரும். நாம் தான் சூதனமாக நடந்து கொள்ள வேண்டும்.

ALSO READ:  பழநி கோயிலுக்கு நீதிமன்றத்தால் ... ஒரே வருடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல்!

ராகு சனி போன்று பலன் கொடுப்பவர். நிறத்தில் கருப்பு. நீஷ பாஷைகள் (குரூரமான வார்த்தைகள்) பேச வைப்பவர் கோமேதகம் ரத்தினம் இவருக்குரியது. வெளிநாட்டுக்காரருக்கு உகந்தவர். அன்னிய மதத்தினரைக் குறிக்கும் கிரகம். தந்தை வழி பாட்டனைக் குறிப்பவர். இவரை வணங்கினால் விஷ ஐந்துகளால் பாதிப்பு இருந்தால் நிவர்த்தி உண்டு. ராகு பலத்துடன் இருந்தால் பெரிய நாக்கு, பெரிய கண்கள், பெரிய கோரை பற்கள், பெருத்த வயிறு கொண்டபெண் தெய்வங்கள். ஆக மொத்தம் ராகு என்றால் பிரமாண்டம்.

கேது: கேதுவைப் பற்றிச் சொல்லப் போனால் ஞானகாரகன். சூரியனைவிட பலம் கூடியவர். எந்த ராசிக்கெல்லாம் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்:-

ஜென்மத்தில் ராகு இருப்பது. சோகம், புக்தி தடுமாற்றம் புத்திக் குறைவு. மேஷத்தில் ராகு 7வது வீடாகிய துலாம் ராசியில் கேது களத்திர ஸ்தானத்தில் கேது பெண்களால் துன்பம். நண்பர்கள் கூட்டு பகை ஆகி தெளிவு பிறக்கும். மேஷ ராசியினர் நாகர் வழிபாடு. நாகத்தை ஆபரணமாகக் கொண்ட தெய்வங்களை வணங்குதல். நவ கிரகத்தில் இருக்கும் ராகு கேதுவை வணங்குதல் சிறப்பைத் தரும். ராகு நெருப்பு ராசியாகிய மேஷம், அதாவது ஹோம நெருப்பு எரிந்து மறையக் கூடிய இடம், கோயில்களில் நடக்கும் ஹோமங்களில் கலந்து கொள்வதே பரிகாரம்தான். இதனால் ராகுவின் தாக்கம் குறையும்.!

ரிஷபம்:-

வியாதி, செலவு. ரிஷபத்திற்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து வந்த ராகு, பெயர்ச்சி ஆகி 12ஆம் வீடாகிய மேஷத்திற்கு சென்றுவிடுவதால் பெரியஅளவிலான வியாதி அதற்கான செலவையும் கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கேது ஆறாம் வீட்டில் இருந்து நன்மை கொடுப்பார். ஆனால் ராகுவை மனதில் வைத்து பரிகாரம் செய்து கொள்ளல் அவசியம். நவகிரகத்தில் இருக்கும் ராகுவை வழிபடுவது உகந்தது. வீண் செலவை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்:-

ராகு இதுவரை 12ஆம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இருந்த ராகு, பெயர்ச்சிக்கு பிறகு லாப ஸ்தானமாகிய பதினொன்றாம் இடத்திற்கு செல்வது சிறப்புதான். பிரமாண்டமான லாபத்தைக் கொடுப்பதில் தவற மாட்டார் ராகு. மிதுன ராசிக்காரர்கள் ராகுக்கு பரிகாரம் தேவை இல்லை. ஆனால் கேது ராசிக்கு ஐந்தில் இருப்பது செலவு ஏற்படும் வகையில் அமைந்தாலும் சூதானமாக இறைவழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் முக்கியம். கேது புத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். செம்பாம்பாகிய கேதுவின் அதிபதியாகிய விநாயரை வணங்கவும்.

ALSO READ:  பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

கடகம்:-

கடகத்திற்கு இதுவரை 11ல் இருந்து வந்த ராகு, பெயர்ச்சிக்கு பிறகு பின்னோக்கி பத்தாமிடத்திற்கு சென்று பண விரயத்தையும் பகையையும் கொடுப்பதுமாக இருக்கும். கடக ராசிக்காரர்களும் பரிகாரம் செய்துகொள்ளவேண்டும். நாகர் சிலைக்கு அபிஷேகப் பொருள் வாங்கிக் கொடுப்பது சிறந்த பரிகாரமாக அமையும். கேது, நான்கிலும் இருப்பது தாய்க்கும், தாய் வழி உறவுக்குள்ளும் விரோதம் வளரும். அதனால் மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புஉள்ளது. கடக ராசியினர் ராகுவுக்கும் கேதுக்கும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அபிஷேகப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பது உத்தமம்.

சிம்மம்:-

சிம்மத்திற்கு இதுவரை பத்தாமிடத்தில் இருந்து வந்த ராகு ஒன்பதாமிடத்திற்கு செல்வது காரியத் தடையையும் நஷ்டத்தையும் பீடையையும் கொடுப்பார். ராகுவுக்கு சிம்ம ராசியினர் பரிகாரம் செய்து கொள்ளல் அவசியம். காட்டில் இருக்கும் சர்ப்ப கோயில்கள் தரிசனம் சிறப்பைத் தரும். புத்திரப் பேறு கிடைக்கும். செம்பாம்பாகிய கேது ராசிக்கு இதுவரை நான்கிலிருந்து வியாதியையும் பந்து விரோதத்தையும் கொடுத்தது, மூன்றாமிடம் வருவது வெற்றிதான் இனி ஜெயம்தான்.

கன்னி:-

ராசிக்கு இதுவரை 9ல் இருந்து வந்த ராகு பெயர்ச்சிக்குப் பிறகு எட்டாமிடம் வருவது சிறப்பல்ல! தண்டனை செலவு வரும். பரிகாரம் செய்து ராகுவை குளிர்வித்தல் நிம்மதி தரும். கோயில்களில் ஹோமத்திற்குத் தேவையான பொருள்கள், செங்கல், மணல் வாங்கிக் கொடுக்கலாம். நிலத்தில் வளரும் கண்ணுள்ள புற்றை மஞ்சள் குங்குமம் போட்டு வணங்குவது சிறப்பு. கன்னி நில ராசி. இதுவரை மூன்றிலிருந்து வந்த கேது இரண்டாமிடத்திற்கு வருவது சிறப்பல்ல தேகத்திற்கு (உடலுக்கு) பீடை தனம் பாதித்து தெளிவு பிறக்கும். பரிகாரம் செய்யவும்.

துலாம்:-

இதுவரை எட்டாம் இடத்தில் இருந்த ராகு, பெயர்ச்சிக்குப் பிறகு ஏழாம் இடம் சென்று, தண்டனையும் செலவையும் கொடுப்பதில் குறியாய் இருப்பார். கூட்டாளி உறவு பகை பெறும். அவற்றால் செலவு மிகும். ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்து வந்த கேது, ஜென்மத்திற்கு வருவது சிறப்பல்ல. சோகம், புத்திக் குறைவு ஏற்படும். துலா ராசியினர் ராகுவுக்கும் கேதுவுக்குமே பரிகாரம் செய்து கொள்ளலாம். தனியாக ராகுவுக்கும் கேதுக்கும் பரிகாரம் செய்ய வேண்டாமே. நவ கிரகத்தில் இருக்கும் ராகு கேது பகவானுக்கு வாசனை பத்தி அல்லது தூபம் போட சாம்பிராணி வாங்கிக் கொடுக்கலாமே.

ALSO READ:  செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மொபைல் ஏடிஎம்.,!

விருச்சிகம்:-

ராசிக்கு இதுவரை ஏழில் இருந்த ராகு, பெயர்ச்சிக்குப் பிறகு பின்னோக்கி 6ஆம் இடத்திற்கு வருவது சிறப்போசிறப்பு. நன்றாக இருக்கும். ஆனால் கேது ஜென்மத்தில் இருந்தவர் பெயர்ச்சிக்குப் பிறகு 12ம் இடம் செல்வது நல்லதல்ல. இருந்த போதிலும் கேதுக்கான பரிகாரம் செய்து கொள்ளல் அவசியம். விருச்சிகம் நீர் ராசி. விநாயக பெருமானுக்கு தினமும் அல்லது அசுபதி, மகம், மூலம் நட்சத்திர நாளில் ஒரு குடம் நீர்விட்டு தீபம் போட்டு வருக.ஜெயம் உண்டு.

தனுசு:-

ராசிக்கு இதுவரை ஆறில் இருந்த ராகு, பெயர்ச்சிக்கு பிறகு ஐந்தாமிடம் வருவது சிறப்பல்ல. புத்திரர்கள் மீது கவனம். பல சேதம் செலவு ஏற்பட வாய்ப்பு. இந்த ராசிக்காரர்கள் ராகுக்கு பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். கேது இதுவரை 12ல் இருந்தவர் பெயர்ச்சிக்குப் பிறகு லாபத்தை நோக்கிச் செல்வது சிறப்பு. தனலாபம், வரவு. அதற்கான புத்தியைக் கொடுத்தல் சிறப்புதான். ராகு பரிகாரம் கோயில்களில் நடக்கும் ஹோமத்திற்கு ஹோமப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும் ஹோமத்தில் கலந்து கொள்வதும் சிறந்த பரிகாரமாக அமையும்.

மகரம்:-

ராசிக்கு இதுவரை ஐந்தில் இருந்த ராகு பெயர்ச்சிக்குப் பிறகு நான்காம் இடத்திற்கும், கேது இதுவரை லாப ஸ்தானமான பதினொன்றில் இருந்த கேது ஒரு படி குறைந்து பத்தாமிடம் சென்று பலன்கொடுக்கவல்லது. ஆக நவகிரகத்தில் உள்ள ராகுக்கும் கேதுக்கும் தீபம் போட்டு வர வாழ்க்கை பிரகாசம் அடையும். புற்று பரிகாம் சிறப்பு.

கும்பம்:-

ராசிக்கு இதுவரை நான்கில் இருந்த ராகு பெயர்ச்சிக்குப் பிறகு மூன்றுக்கு வருவது சிறப்பு. ஆனால் கேது பத்தாமிடத்தில் இருந்தவர் பெயர்ச்சிக்கு பிறகு ஒன்பதாமிடம் செல்வது நல்லதல்ல. கேதுக்கு பரிகாரம் செய்ய ஒரே வழி விநாயகர் வழிபாடுதான். கும்பம் காற்று ராசி. ஆகையால் விநாயகர் கோயிலுக்கு தூபம் போட வாசனைத் திரவியம், சாம்பிராணி ஊதுபத்தி வாங்கிக் கொடுத்து நன்மை பெறலாமே.

மீனம்:-

ராசிக்கு இதுவரை மூன்றிலிருந்த ராகு பெயர்ச்சிக்குப் பிறகு இரண்டாமிடம் வருவதும், கேது ஒன்பதாம் இடத்தில் இருந்து பெயர்ச்சிக்குப் பிறகு எட்டாம் இடம் செல்வதும் சிறப்பல்ல.ஆக மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கும் சரி சிவனுக்கும் சரி அம்பாளுக்கும் சரி அபிஷேகத்திற்கு தேவையான நீர்ப்பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாமே.

S.காளிராஜன்,
ஸ்ரீவிநாயகா ஜோதிடம்
9843710327 | 7603927533.

தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version