பனிவரகு புட்டு
தேவையான பொருட்கள்
• 1 கப் பனிவரகு மாவு
• 1/2 கப் வெல்லம்
•1/2 கப் துருவிய தேங்காய் 2ஏலக்காய்
சிறிது எள்
• பசு நெய்
செய்முறை
. பனிவரகு மாவை சிறிது உப்பு சேர்த்த தண்ணீரினை தெளித்து நன்கு கலக்கவும்.
மாவு சற்று ஈரமாகவும், கட்டிபடாமலும் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதனை இட்லி தட்டில் பரப்பி வைத்து மேலே ஈரத்துணி போர்த்தி மூடி போட்டு பதினைந்து நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் இதனுடன் துருவிய வெல்லம், துருவிய தேங்காய், பசு நெய்யில் பொறித்த எள், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
தேவையானால் சிறிது பசு நெய்யினை சேர்க்கலாம், கூடுதல் சுவையாக இருக்கும்.
சுவையான சத்தான பனிவரகு புட்டு தயார்.