பனிவரகு இடியாப்பம்
தேவையான பொருட்கள்
2 கப் பனிவரகு மாவு
1பட்டை
1 கிராம்பு
1 ஏலக்காய்
1/2% கப் காரட்
1/2கப் பீன்ஸ்
1/2கப் பட்டாணி
2 பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு
கொத்துமல்லி
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை
• முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் பனிவரகு மாவை போட்டு, அதில் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் இருக்கும் நீரை ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ளவும்,
பிறகு பிசைந்த பனிவரகு மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி தட்டில்
வட்டமாக பிழியவும். * இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிழிந்து வைத்துள்ள இடலி தட்டை வைத்து மூடி வேக வைத்து இறக்கவும்
சூடு ஆறியதும் சிறிதாக அல்லது தேவைப்படும் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளலாம்
காரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை நன்கு கழுவி பொடியாக நறுக்கி
அவற்றை வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும். அதில், பச்சை மிளகாய், வெந்த காய்கறிகள், கரம் மசாலா, உப்பு அனைத்தையும் போட்டு, மிதமான தீயில் வேகவிடவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கலாம்.
நன்றாக வெந்ததும், இறக்கி
ஆறவிடவும்.
*மீண்டும் வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுப் பொரிக்கவும்.
அதில் காய்கறி மசாலாவைப் போட்டு வதக்கி, தயாரித்து வைத்துள்ள பனிவரகு இடியாப்பத்தைப் சேர்த்துக் கிளறவும்.
நன்றாக மசாலா கலந்தவுடன், இறக்கிப் பரிமாறவும்,