ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
எல்லா மனிதர்களுக்கும் ஸுகம் வேண்டும் என்கிற ஆசை பொதுவாக இருக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு பகவானின் கிருபையை அடைவது மிக அவசியம். பகவானின் கிருபையை அடைவதற்கு சில ஸாதனங்களை சாஸ்திரங்கள் கூறியிருக்கின்றன.
மந்த்ரஜபம் என்பது அப்பேர்பட்ட ஸாதனங்களில் ஒன்று. ஏதாவது ஒரு மந்த்ரத்தை நிஷ்டையுடன் ஜபித்தால் இஷ்டார்த்தம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
மந்த்ரங்களில் காயத்ரீ மந்த்ரம் மிகவும் உயர்ந்தது. காயத்ரீ மந்த்ரத்தை ஜபித்தவனுக்கு ஸகல க்ஷேமங்களும் உண்டாகும்.
காயத்ரீ என்கிற சப்தம் மட்டுமே காயத்ரீ மந்த்ரத்தை ஜபிக்கிறவனை ஆபத்திலிருந்து காப்பாற்ற கூடியது என்று நம்புகிறார்கள்.
உபநயனம் ஆன உடனே காயத்ரீ மந்த்ரத்தை உபதேசம் செய்யவேண்டும். அன்றைய தினம் முதல் ஒரு நாள் கூட தவறாமல் அதை ஜபிக்கவேண்டும். இதற்கான பலனை ஸுதஸம்ஹிதையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது சந்தேகத்துக்கு காரணம் எதுவும் இல்லாமல் அவன் எல்லா விருப்பங்களையும் அடைகிறான் என்று பொருள். காயத்ரீ உபாஸனையால் ஜனங்கள் சர்வாபீஷ்டங்களையும் அடைவார்களாக!