விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை தான் நினைவுக்கு வரும். ஆனால் கொழுக்கட்டை நாம் எப்போது வேண்டுமானாலும் தயார் செய்து சாப்பிடலாம். அதை வீட்டில் விநாயகருக்கும் நிவேதனம் செய்து சாப்பிட்டால் அதில் உள்ள சுவையே தனிதான்!
விநாயகருக்கு என்றால் நாம் தேங்காய் கொழுக்கட்டை செய்வோம். அத்தோடு பருப்போடு சேர்ந்த உப்புக் கொழுக்கட்டையும் செய்து நிவேதனம் செய்து உண்போம்.
இதில், சுவையான உப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்!
உப்புக் கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி
கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய் வத்தல்
பெருங்காயம்
தேங்காய்
எண்ணெய்
கறிவேப்பிலை
உப்புக் கொழுக்கட்டை செய்யும் முறை:
கொழுக்கட்டை செய்யத் தேவையான மாவினை முதலில் செய்து கொள்ள வேண்டும்.
மாவு தயாரிக்கும் முறை:
புழுங்கல் அரிசியை 45 நிமிடம் ஊற வைக்கவும், பின்பு அதை கெட்டியான பதமாக அரைத்துக் கொள்ளவும்.
உப்பு உருண்டை செய்யும் முறை:
அரைத்து வைத்திருக்கும் மாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு தேங்காயைக் கீறி அல்லது துருவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய்வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை அதில் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்.
பின்பு தாளித்த பொருட்களை மாவுடன் சேர்த்துப் பிசைந்து அதை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் உருண்டைகளை சில நிமிடங்கள் ஆவி கட்டி எடுக்கவும். அவ்வளவுதான் ஆவியில் வேக வைத்த சுவையான பாரம்பரியமான உப்புக் கொழுக்கட்டை தயார்! இது ஆவியில் வேக வைத்து எடுப்பதால் உடலுக்கும் ரொம்ப நல்லது.