மீடியாவில் “Expose” எனும் வார்த்தை அடிக்கடி பயன்படும். பிரஸ்மீட், இண்டர்வியூக்களில் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு, எதிராளியை திணறடிப்பது, அதன் மூலம் அவரது இமேஜை சரிப்பது தான் Expose.
தமிழகத்தில் இதை திராவிட மீடியா எப்படி பயன்படுத்துகிறது? என்பதற்கு சில உதாரணங்களை சொல்லலாம்.
2019-20-ல் கொரோனா காலகட்டத்தில் தான் அண்ணாமலை என்ற பெயர் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்தி வந்தவுடன், அனைத்து மீடியாவிலும் அவருடைய பேட்டிகள் தொடர்ச்சியாக வந்தன.
இத்தனைக்கும் அப்போது Lockdown காலகட்டம் என்பதால் அதில் பெரும் பாலான பேட்டிகள், zoom call ல் எடுத்த பேட்டிகள். அண்ணாமலையிடம் எல்லாவிதமான கேள்வி களும் கேட்கப்பட்டன. அப்போதிலிருந்து அவரை பாலோ செய்வதால், அனைத்து பேட்டிகளையும் நான் பார்த்திருக்கிறேன். அவரும் சலிக்காமல் பதில் சொன்னார். அந்த பேட்டி களில் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், அவரது நிலைப்பாட்டை புரிந்து கொண்டு, அவரை Target செய்ய ஆரம்பித்தது திராவிட IT wing.
இந்த விஷயம் அப்போது புரியவில்லை.
அதற்கு பிறகான தொடர்ச்சியான செயல்பாடுகளை இணைத்துப் பார்த்தால் இது தெளிவாக புரியும்.
அதே 2019-20 காலகட்டத்தில் தான் உதயநிதி முதல்முறையாக நேரடி அரசியலுக்கு உள்ளே வருகிறார். அன்றிலிருந்து இன்று வரை உதயநிதி கொடுத்த interview க்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
press meet வேறு. Interview வேறு. நான் குறிப்பிடுவது Interview மட்டுமே. சினிமாவில் நடிக்கும் போது ஹீரோவாக, தயாரிப்பாளராக அவர் கொடுத்த இண்டர்வியூக் களை விடவும் குறைவு தான். இத்தனைக்கும் உதயநிதி MLA வாகி, 2 துறைகளுக்கு அமைச்சராகி, இன்று துணை முதல்வராகவும் ஆகி விட்டார். ஆனாலும் இன்று வரை உதயநிதியிடம் ஒரு கடினமான கேள்வி கூட கேட்கப்பட்டதில்லை. அது தான் திராவிட மீடியாவின் சூட்சமம்.
ஏனெனில் அண்ணாமலையை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக “Expose” செய்ய வேண்டும் என்பதே Media வின் Target. அவர் press meet ல் பேசுவதை வைத்து தான் அவர் மீதான narrative வை build செய்கிறது திராவிட IT wing.
அதே சமயம் உதயநிதியிடம் ஒரு கடினமான கேள்வி கூட கேட்டு விடாமல் அவரை பாதுகாக்கும் வேலையை செய்வதும் அதே மீடியா தான். அப்படியே சில கேள்விகள் வந்தாலும், உதயநிதி சொல்வது தான் பதில்.
அதற்கு சமீபத்திய உதாரணம் “Mike வேலை செய்யலை, சரியாத்தான் பாடினாங்க” என்று பச்சைப் பொய் சொன்னார் உதயநிதி. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப்பாடினார்கள் என்று உதயநிதியிடம் எதிர்கேள்வி கேட்கக்கூட எந்த மீடியாவுக்கும் தைரியம் இல்லை. திமுகவை எதிர்ப்பவர்களை expose செய்யத் துடிக்கும் மீடியா, உதயநிதி எந்தக் காரணம் கொண்டும் expose ஆகி விடக்கூடாது என்று திட்டம் போட்டு வேலை செய்யும்.
எந்தக்காரணம் கொண்டும் ஸ்டாலின், உதயநிதி, மற்ற தலைவர்களின் incompetence வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வது தான் திராவிட மீடியாவின் வேலை.
அண்ணாமலையிடமும், சீமானிடமும் சீறிப்பாய்ந்து கேள்வி கேட்டு சரிக்கு சரி மல்லுகட்டும் மீடியா, உதயநிதியிடம் பம்மி பதுங்கும். ஸ்டாலினிடம் லிஸ்டில் இருக்கும் கேள்விகளை மட்டும் கேட்கும். மற்ற துறை அமைச்சர்களிடமும் அப்படித்தான். அவர்கள் சொல்வது தான் பதில். அதில் எதிர்கேள்வி என்பதே கிடையாது. அவர்கள் சொல்லும் பதில் தவறாக இருந்தாலும் கண்டுகொள்ளப்படாது.
திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரையுமே ஜோக்கர் போல சித்தரிப்பார்கள். அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, வளர்மதி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எப்படி joker ஆக்கப்பட்டார் கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
செய்தி சானல்களில் வரும் news card களில் இடம் பெறும் போட்டோக்கள் வரை நம்மை influence செய்வதற்கு பயன் படுத்துகிறார்கள். திமுகவை சேர்ந்தவர்கள் என்றால் Hero போல போட்டோ இருக்கும். அதுவே எதிர்முகாம் என்றால் வேண்டுமென்றே தவறான போட்டோவை பயன்படுத்துவார்கள். அதுதான் திராவிட மீடியாவின் agenda.
திமுக தலைவர்கள் திராவிட மீடியாவை எப்படி லெஃப்ட் ஹாண்டில் deal செய்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.
சென்ற வருடம் மழைக்காலத்திற்கு முன்னர் “4000 கோடி செலவு செய்திருக்கிறோம், மழை வந்தால் ஒரு சொட்டு கூட தண்ணீர் தேங்காது” என ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர்கள், மேயர் வரை ஒருவர் பாக்கியில்லாமல் சொன்னது நினைவு இருக்கலாம். ஆனால் மழை வந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மொத்த தமிழ்நாடும் 4000 கோடி என்னாச்சு? என்று கேள்வி கேட்டது. அதற்கு முறையாக பதில் சொல்ல வேண்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு என்ன செய்தார்? தெரியுமா. நேராக கலைஞர் செய்திகள் சானலில் அமர்ந்து ஒரு பேட்டி கொடுத்தார். அதில் 4000 கோடியில் 42% மட்டுமே பணிகள் முடிந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு போனார். அடுத்த நாள் திராவிட மீடியா மீண்டும் அதே 4000 கோடி பற்றி கேட்க, “அதெல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு, போய் பார்த்துக்குங்க” என்று கலைஞர் டிவி பேட்டியை கைகாட்டிவிட்டுச் சென்றார். அவ்வளவு தான். அன்றோடு 4000 கோடிக்கும் சமாதி கட்டப்பட்டது.
விஜய்காந்த், எடப்பாடி, சீமான், அண்ணாமலை, ரஜினி என திமுகவுக்கு எதிராக இருப்பவர்களிடம் தமிழக மீடியா எப்படி நடந்து கொண்டது? என்பதை யோசித்துப் பாருங்கள். திமுகவுக்கு எதிராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக விஜய்காந்தை காமெடியன் ஆக்கினார்கள். வடிவேலு எனும் காமெடியனை ஹீரோவாக்கினார்கள். கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்ன ரஜினியை எப்படி round கட்டினார்கள் என்று அனைவரும் அறிவார்கள். அதாவது நல்லவனை கெட்டவனாக காட்டும். கெட்டவனை உத்தமனாக காட்டும். புத்திசாலியை முட்டாளாகவும், வடிகட்டிய முட்டாளை அறிவாளியாக வும் காட்டுவது தான் திராவிட மீடியாவின் வேலை.
சரி விஜய் பெயரை முதலில் எழுதிவிட்டு, ஏன் இத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்,….
விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து, கட்சி ஆரம்பித்து, கொடி வெளியிட்டு, மாநாட்டுக்கு தேதி அறிவித்து, மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். அரசியல் வருகையின் போதே அவர் திமுகவுக்கு எதிரி என்பது முடிவாகிவிட்டது. கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆன போதும், இதுவரை விஜய்யிடம் திராவிட மீடியா மைக்கை நீட்டியதே இல்லை. அவர் வீட்டின் முன் நின்றதில்லை. அவர் ஏர்போர்ட் செல்லும் போது துரத்தியதில்லை. கட்சி ஆரம்பித்த பிறகு சில பொது நிகழ்ச்சிகளிலும் விஜய் கலந்து கொண்டார். அங்கு கூட விஜய் பக்கத்தில் கூட மீடியா போகவில்லை. விஜய் மீடியாவை சந்திக்க வில்லை என்ற முணுமுணுப்பு கூட மீடியாவில் இல்லை.
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்றவுடன் வளைத்து வளைத்து கேள்வி கேட்ட மீடியா, அண்ணாமலை அரசியலுக்கு வருகிறேன் என்றவுடன் துரத்தி, துரத்தி பேட்டி எடுத்த மீடியா, விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி 6 மாதம் ஆன பின்னும் கூட இன்னும் அவரிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்ற விஷயம் புரிகிறதா?..
விஜய் மாநாடு முடிந்த பிறகு அதைப் பற்றிய பாசிட்டிவ் செய்திகள் மட்டுமே வருவதை பார்த்தீர்களா?
அப்படியானால் திராவிட மீடியாவின் பரிசுத்த ஆதரவு விஜய்க்கு இருக்கிறது என்று அர்த்தம். எந்தக் காரணம் கொண்டும் விஜய் expose ஆகிவிடக் கூடாது என்று விஜய் தரப்பும், திராவிட மீடியாவும் தீயாக வேலை செய்திருக்கிறது. இனி மேலும் செய்யும். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் சில தினங்களில் தமிழின் முன்னணி ஊடகத்தில் விஜய் பேட்டி வெளியாகும். அதிலும் விஜய்யின் Hero image நன்றாக நிலை நிறுத்தப்படும்.
திமுகவை நேரடியாக எதிர்த்த மற்றவர்களுக்கு நடப்பதையும், திமுக தலைவர்களுக்கு நடப்பதையும், விஜய்க்கு நடப்பதையும் ஒப்பிட்டு புரிந்து கொண்டால் நான் சொல்வது புரியும்.
இதைப்புரிந்து கொண்டால் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்டுரையை உங்களால் relate செய்து கொள்ள முடியும். நான் சொல்லி யிருப்பது அனைத்தும் உங்கள் கண் முன்னால் நடந்த சம்பவங்கள் தான். அவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் மட்டுமே, நம்மைச் சுற்றியிருக்கும் மாயவலை நம் கண்ணுக்கு புலப்படும்.
இதுதான் திராவிட மீடியாவின் narrative.
மக்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
இங்கு இருப்பவை அனைத்தும் Red light Media தான்.
இவர்களுக்கு தேவை காசு மட்டுமே. நாட்டின் மதிப்போ, முன்னேற்றமோ, மக்கள் நலமோ, எதுவும் ஒரு பொருட்டு அல்ல.
தமிழ் நாட்டு மக்கள் இப்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால் இனி எப்போதும் தமிழ் நாட்டிற்கு விடிவு இல்லை.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
திராவிடம் என்னும் நரகாசுரனை அடியோடு அழித்து ஒழிப்போம் என்று சபதம் ஏற்போம். தீப ஒளி ஏற்றுவோம்!!!
- சமூகத் தளத்தில் வைரலான பகிர்வு