நடிகர் ரஜினி காந்த் நடித்த ரங்கா, தாய்வீடு, அன்னை ஓர் ஆலயம், நடிகர் கமல்ஹாசன் நடித்த ராம் லக்ஷ்மணன், தாய் இல்லாமல் நான் இல்லை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவரும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரின் மருமகனுமான இயக்குனர் ஆர்.தியாகராஜன் இன்று காலமானார்.
இவருக்கு வேல்முருகன் என்ற மகனும் சண்முகவடிவு என்ற மகளும் உள்ளனர். இவரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடக்கவுள்ளது.
வீட்டு முகவரி: பிளாட் நம்பர் C11 யுதிகா அபார்ட்மெண்ட், பாரதியார் தெரு, காவ்யா கார்டன், போரூர், சென்னை– 600 116.
தொடர்புக்கு: வேல்முருகா – 99406 17692, பாலசுந்தரம்- 98400 42151