இந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.
சினிமா பிரபலங்களுக்குதான் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள். சினிமாக் கவர்ச்சிக்கு மயங்காத இந்தியர்கள் வெகு சொற்பம். அது நேரில் வந்தாலும் சரி, வாய்ஸ் கொடுத்தாலும் சரி. அதே நிலை, சமூக வலைத்தளங்களிலும் தொடர்கிறது. பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவைக் குறித்தே இருக்கும்.
தற்போது இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருக்கக்கும் இந்திய பிரபலம் – நடிகை பிரியங்கா சோப்ரா. நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோயர்ஸ் கொண்டுள்ளார். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
அதிகம் பாலோவர் வைத்துள்ள பிரபலங்கள் : –
பிரியங்கா சோப்ரா – 2.5 கோடி
தீபிகா படுகோன் – 2.49 கோடி
விராட் கோலி – 2.27 கோடி
சல்மான் கான் – 1.73 கோடி
நரேந்திர மோடி – 1.35 கோடி
ஷாருக்கான் – 1.33 கோடி
அமிதாபச்சன் – 95 லட்சம்
