குடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நச்சென்று நாலு வரியில் ஒரு சினிமா விமர்சனத்தை எழுதியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு, அழகுத் தமிழில் நாலு வரியில் அவர் எழுதியுள்ள சினிமா விமர்சனம், கடைக்குட்டி சிங்கத்துக்கு ஒரு விளம்பரமாக அமைந்திருக்கிறதோ இல்லையோ, வெங்கய்ய நாயுடுவுக்கு இது ஒரு அதிரடி விளம்பரமாகவே ஆகிவிட்டது. அந்த விளம்பரக் கடமையை நாமும் செய்துவிடுவோமே! காரணம் அவர் தமிழில் டிவிட் போட்டிருக்கிறாரே..!

அந்த சினிமா விமர்சன டிவிட் இதானுங்க…

சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.