spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவேலுப்பிள்ளை பிரபாகரனின் உண்மை முகம் இது தான்..!

வேலுப்பிள்ளை பிரபாகரனின் உண்மை முகம் இது தான்..!

- Advertisement -

அண்ணன் வேலுப்பிள்ளை #பிரபாகரன் ஓர் சிறந்த இந்துவே. அவர் சிறந்த அம்மன் பக்தர். இயக்கத்தில் இருந்த எல்லா விடுதலைப் போராளிகளுக்கும் தெரியும்.

அவர் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த வரை பெந்தகொஸ்தே போன்ற கிருஸ்தவ அமைப்புகளை யாழில் இருந்து வெளியேற்றினார். 24மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றினார். அப்போது தம்பி சீமான், அமீர், திருமுருகன் காந்தி போன்றவர்கள் பிறக்கவில்லை போலும்.

விடுதலைப் போராட்டத்தின் போது கோயில் நகைகள் பணம் போன்றவற்றை கைபற்ற வில்லை.. #அண்ணியை இந்து முறைப்படியே இந்தியாவில் வைத்து திருமணம் செய்தார். தனது மகளுக்கு #துவாரகா என்ற சமஸ்கிருத பெயரையும் தனது கடைசி மகனுக்கு #பாலசந்திரன் என்ற #சமஸ்கிருதபெயரையும் சூட்டி மகிழ்ந்தவர்.

தனது மூத்த மகனுக்கு ஏன் கிருஸ்தவ பெயர் வைத்தார் என்று கேட்கலாம். சிறந்த கரும்புலி சார்லஸ் எட்டனியை கௌரவிக்கும் பொருட்டே. (சார்லஸ் எட்டனி என்ற பெயரும் புனைபெயரே) . எந்த சந்தர்ப்பத்திலும் #பிராமணர்களை புறக்கணிக்க வில்லை. யாழ்பான பிராமணர்கள் விடுதலை போராட்டத்தின் பெரும் பங்காற்றியுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போர்வையில் #கிருஸ்தவ மத மாற்றங்கள் நிகழ்ந்தன. இதைப் பற்றி கலந்தாய்வு செய்தபோது யுத்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும். யுத்தத்தின் பின்னர் இந் நிலைமையை நாங்கள் மாற்றுவோம் என்ற உறுதி மேலிடத்திடம் கிடைத்தது.

இங்கு உறுதியாக ஒன்று கூறவேண்டும் #கத்தோலிக்க_திருச்சபை மதமாற்ற நிகழ்வுகளை செய்யவில்லை. அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் பெரும் பங்காற்றியுள்ளனர். பல அழிவுகளையும் சந்தித்தார்கள்.

தகவல்: இலங்கையை சேர்ந்த சகோதரர் கதிர்காமம் அம்பலம்

– ராஜா, ஸ்ரீவி.



திருப்போரூர் – விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்வில் மிக முக்கியமான இடம்! இதுதான், தன் வாழ்வின் திருப்புமுனையாக மதிவதனியை திருமணம் செய்ய பிரபாகரன் தேர்ந்தெடுத்த இடம்! தமிழர் வாழ்வியல் வரலாற்றில் போர்க்கடவுளாக வணங்கப்படும் வேலேந்திர முருகக் கடவுள் கோயில் கொண்ட தலம் என்பது இதன் சிறப்பு!

தன் மூத்த சகோதரியின் திருமணத்துக்குப் போடப்பட்ட மோதிரத்தை விற்று துப்பாக்கி வாங்கிய பிரபாகரன்தான் பின்னாளில் முப்படைகளையும் கொண்ட சக்தி வாய்ந்த இயக்கத்தின் தலைவராக உருவெடுத்தார். தங்கதுரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில் இருந்து புகை, மது, மாது போன்றவை கூடாது, போராளிகள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது போன்ற கொள்கைகளை கடுமையாகப் பின்பற்றினார். ஆனால், அப்படிப்பட்ட பிரபாகரனின் வாழ்கையில்தான் பெரும் திருப்புமுனையாக அமைந்தது அவரது திருமணம்.

1983- ஈழத் தமிழர் வரலாற்றில் கருப்பு ஆண்டு. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவின் முழு ஆதரவுடன் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்களால் கலவரங்கள் முடுக்கி விடப்பட்டன. கண்ணில் கண்ட தமிழர்களை எல்லாம் அடித்து, உயிரோடு எரித்து வெறியாட்டம் ஆடினார் சிங்களர். இந்த நேரத்தில் பிரபாகரனும் சிங்கள அரசுக்கு எதிராக தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திகொண்டிருந்தார். அப்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தனர் அங்கே பயிலும் நான்கு மாணவியர். சிங்கள அரசிடம் உண்ணாவிரதத்தின் மூலம் தீர்வு ஏதும் கிடைக்காது என்பதை உணர்ந்திருந்த பிரபாகரன் நான்கு பெண்களையும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, வேறு வழிகளில் போராட யோசனை கூறினார். இந்த நான்கு பெண்களில் ஒருவர்தான் மதிவதனி.

கலவரங்களால் நிலைகுலைந்து போயிருந்த யாழ்ப்பாணத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த பிரபாகரன், அந்த நான்கு பெண்களையும் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கத்தின் பாதுகாப்பில் சென்னைக்கு அனுப்பி வைத்தார். பின்னாளில் பிரபாகரனும் விடுதலைப்புலிகள் பலரும் சென்னைக்கு பயிற்சிக்காக வந்தனர். திடீரென ஒரு நாள் அடேல் பாலசிங்கத்திடம் அதைச் சொன்னார் பிரபாகரன்… “நான் மதிவதனியை விரும்புகிறேன்” என்று!

இயக்கத்தின் விதிகளின் படி திருமணம் செய்து கொள்வது தவறு. எனவே, பிரபாகரன் திருமணம் செய்து கொள்வதில் இயக்கத்தில் பலருக்கும் முரண்பாடான கருத்துகள் இருந்தன. அப்போது பலருக்கும் ஒரு சமாதானம் சொல்லப்பட்டது. இயக்கத்தில் இருப்பவர்கள் முறைகேடான வகையில் தகாத பெண் உறவுகளை வைத்துக் கொள்ளக்கூடாதே தவிர, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறே இயக்கத்தின் விதிகள் மாற்றப்பட்டன. தொடர்ந்து பிரபாகரனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. தனது திருமணத்தை சென்னையிலேயே வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தார் பிரபாகரன். அப்போது தாம் திருமணம் செய்து கொள்ளும் இடத்தையும் முடிவு செய்தார்கள்.

அது – திருப்போரூர்! திருப்போரூரில் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் பிரபாகரன்-மதிவதனி திருமணம் நடைபெற்றது. இந்த நேரத்தில் பிரபாகரனது பெற்றோர் தமிழகத்தில்தான் இருந்தனர். ஆனால் அவர்கள் திருமணத்துக்கு வர மறுத்துவிட்டனராம். பிரபாகரனுக்கு மாப்பிள்ளைத் துணையாக இருந்தவர் செல்வராசா பத்மநாபன்.

சென்னையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருப்போரூர் முருகன் கோயிலில் இப் பெருமானை வழிபட்டால், அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்ட பயன் கிட்டும் என்பார்கள். சிதம்பரம் சுவாமிகளுக்கு முருகன் காட்சி தந்த தலம். அவர் முயற்சியால் உருவான கோவில் இது. வள்ளி, தேவசேனையுடன் காட்சி தரும் ஸ்ரீகந்தப் பெருமான் சுயம்புவாய்த் தோன்றி கோயில் கொண்ட இடம். எனவே அவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. மாறாக வில்வ மாலை அணிவிக்கப்பட்டு சாம்பிராணி, தைலம், புனுகு போன்ற வாசனை பொருட்கள் சாத்தப்படுகின்றன.

வேறெங்கும் காண முடியாத ஒன்றாக இக்கோயில் கொடிமரம், வட்ட மண்டபத்தில் ராஜகோபுரம் முன் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் வன்னி மரம். இதில் கயிறு கட்டி வழிபட்டால் திருமணம், குழந்தை பேறு, பில்லி சூனியம் போன்றவற்றால் ஏற்ப்படும் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. திரு போர் ஊர் என போருக்கு முருகன் சென்ற கோலம் காட்டும் தலம் என்பதால், பிரபாகரனின் வாழ்வில் ஒரு முக்கியப் பங்காற்றிய கோவில் இது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe