தமிழ்த் திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை எப்படி எல்லாம் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தமிழ்த்திரையுலக இயக்குனர், நடிகர்கள் என சிலர் மீது இவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனிடையே ஸ்ரீரெட்டி பரபரப்புக்காக வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகக் கூறி, அவர் வாயை அடைக்க சமாதானத் தூது, மிரட்டல் அஸ்திரம் என்றெல்லாம் இறங்கினார் நடிகர் விஷால் ரெட்டி.
இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்தார். எனக்கு ஸ்ரீ ரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர் கூறியது குறித்து பலர் என்னிடம் கேட்டனர். இதனால் தற்போது இந்தக் கேள்விக்கு பதில் கூற நான் தயார். ஸ்ரீரெட்டி தன் திறமையை நிரூபித்தால் நான் கண்டிப்பாக பட வாய்ப்பு வழங்குகிறேன்” என்று கூறினார். மேலும் ஸ்ரீரெட்டிக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை எனறார்.
ராகவா லாரன்ஸ் கொடுத்த இந்த சவாலை ஏற்றுள்ள நடிகை ஸ்ரீரெட்டி இப்போது, ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோ என தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூறிய சவாலை ஏற்கிறேன். அனைவரும் என்னை ஆசிர்வதியுங்கள் என்று கூறி, மாஸ்டர் லாரன்ஸ் இது உங்களுக்கானது என வீடியோவுக்கு தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.