திமுக – பாஜக தேர்தல் உறவு மலருமா என்பது பற்றி கருத்துக்கள் உலாவருகின்றன.
2016சட்டமன்றத் தேர்தல் Performance ஐ வைத்துப் பார்த்தால் திமுகவின் Natural choice பாஜக & பாமகவுடன் உறவு கொள்வதாகத்தான் இருக்கும். அத்தேர்தலில் இரு கட்சிகளுமே பல தொகுதிகளில் கணிசமான வாக்குகள் பெற்றதுடன், வெற்றிபெற்ற வேட்பாளர் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றாரோ அதைவிடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றன. அதாவது இக்கட்சிகள் ஏதேனும் ஒரு அணியில் இணைந்திருந்தால் பல தொகுதிகளின் முடிவுகள் மாறி இருக்கும்.
திமுக – பாமக – பாஜக – கொங்குநாடு – Dr கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்… – இவை இணைந்தால் அது ஒரு Wide Rainbow Social Combination ஆக முற்பட்ட வகுப்பினர்/ BC/ MBC/SC.. – ஆகிய ஆதரவு தளத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
திமுக – இப்படி முடிவெடுக்குமா? மோடியைத் தாறுமாறாகத் திட்டிய பிறகு, பலூன் எல்லாம் விட்ட பிறகு? இதைவிடக் கேவலமாக இந்திராவை – அவர் மீது கல்லெறித் தாக்குதலில் வழிந்த ரத்தத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியது ஒரு பக்கம்: ”காஷ்மீரத்துப் பாப்பாத்தி, சேலை கட்டிய ஹிட்லர், மீசை இல்லாத முசோலினி, சாத்தூர் பாலகிருஷ்ணன் உயிர் குடித்த பூதகி, கங்கைக் கரையில் உலவியவள், காவிரிக் கரைக்கு வருகிறாள், கருப்புக் கொடியுடன் வா”- என்று வசனம் பேசிவிட்டு, அடுத்த 1980 தேர்தலில் “நேருவின் மகளே வருக – நிலையான ஆட்சியைத் தருக”- என்று பல்டி அடிக்கவில்லையா?
ஏன் BJP யையே ‘பண்டாரங்களின் கட்சி; காவி கட்சி; ஆக்டோபஸ்’- என்றெல்லாம் பேசிவிட்டு சில வாரங்களுக்கு உள்ளாகவே 1999 தேர்தலில் கை கோக்கவில்லையா திமுக? எனவே திமுகவுக்கு எவ்வளவு திட்டிவிட்டும் பின்பு இணைந்து கொள்வது புதிதல்ல!
ஆனால் இந்த முயற்சி BJP க்கு என்ன பலன் தரும்? பல மோடி ஆதரவாளர்கள், BJP அபிமானிகள் இதை ஏற்க மாட்டார்கள்; திமுக மோடி எதிர்ப்பு பலூன் விட்டது முதல், தமிழன் பிரசன்னா போன்ற அதன் பேச்சாளர்கள் மோடியை ஏசியது வரை மறக்க மாட்டார்கள். அது அரை மனது , கால் மனது கொண்ட கூட்டணியாகவே அமையும்.
அது போக தமிழ் தேசிய அமைப்பினர்- தனி ஈழ ஆதரவு கோஷ்டிகள் திமுக தொகுதிகளை விட்டு விட்டு BJP தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர் பிரச்சாரம் செய்வார்கள்! 2009 ல் இப்படித்தான் காங் – திமுக கூட்டணியில் காங்கிரசை மட்டும் குறிவைத்து தமிழ் தேசியக் கூட்டணி அமைப்பினர் பிரசாரம் செய்து காங்கிரஸ் மட்டும் தோற்க வகை செய்தனர். மயிலாடுதுறை (மணி சங்கர் அய்யர்), சேலம் (தங்கபாலு), ஈரோடு (EVKS), கோவை (P R பிரபு), திருப்பூர் (கார்வேந்தன்), திருச்சி (சாருபாலா தொண்டமான்)… என்று குறிவைத்துத் தோற்கடித்தனர். திமுகவும் கண்டு கொள்ளவில்லை. மத்திய இணை/ துணை/ கேபினட் அமைச்சராகும் வாய்ப்புள்ள இவர்கள் தோற்றால் தங்களுக்குத் தமிழ்நாடு கோட்டாவில் அதிக மந்திரிகள் கிடைக்கும் என்று கணக்கிட்டது திமுக அப்போது!
அது போல இப்போதும் தமிழ் தேசிய அமைப்பினர், கிறிஸ்தவ அமைப்புகள் போன்றவை BJP போட்டியிடும் தொகுதிகளை மட்டும் குறிவைப்பார்கள். திமுக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் மைனாரிட்டியினர் வாக்கு விள்ளாமல் விரியாமல் திமுகவுக்குப் போகும்!
இப்படிப் பல இடர்ப்பாடுகளை உள்ளடக்கிதான் திமுக – பாஜக கூட்டணி (அமைந்தால்) இருக்கும்! இவை குறுகிய காலத் தொல்லைகள்!
இதனால் BJP வெல்லப் போகும் Strategic gain என்னவாக இருக்கும்?
1) தமிழகத்தில் காங்கிரஸ் கழற்றிவிடப் படும்.
2) இடது சாரிகள் – விசிக – மதிமுக அதே காரணத்தால் திமுக கூட்டணியில் இருக்காது.
3) காங் – Left – VCK – MDMK ஒரு அணியாக நிற்கக் கூடும்.
4) இது போக ADMK மற்றும் தினகரனின் AMMK தனித்தனியாக நிற்கும்.
5) இப்படி 4 முனைப் போட்டியில் திமுக – பாஜக- கொங்குநாடு- பாமக- புத.. ஒரு வலிமையான அணியாக இருக்கும்.
இவை எல்லாவற்றையும் விட, BJP க்கு எதிராக ‘எல்லா மதச்சார்பற்ற கட்சிகளையும் இணைத்த பரந்த அணி’- என்ற CONCEPT தமிழகத்திலேயே முதலில் அடி வாங்கும்! இதன் விளைவு அகில இந்திய அளவில் எதிரொலிக்கும்! திமுகவே காங்கிரசைக் கழட்டி விட்டு விட்டது என்றால் மற்ற மாநிலங்களில் அதன் நிலை இன்னும் பலகீனமாகும் – மமதா, லாலு, முலாயம் யாரும் காங்கிரசை சீந்த மாட்டார்கள்; அப்படியே ALLIANCE போட்டாலும் ‘அடிமாட்டு’ விலைக்குதான் – சீட்டுகளை கிள்ளிதான் – கொடுப்பார்கள்!
எல்லாவற்றையும் விட திமுக – BJP கூட்டு மேடைகளில் இதே திமுகவினரை “வருங்காலப் பிரதமர் மோடி அவர்களே”- எனப் பேச வைத்து SWEET REVENGE எடுத்து ஆத்ம திருப்தி அடையலாம்!
எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை NO GAIN – அகில இந்திய அளவில் TOTAL GAIN என்ற அடிப்படையில் இந்தக் கூட்டணி (அமைந்தால்) பலன் கொடுக்கும்!
இது ஒரு அரசியல் பார்வையாளனாக, விமர்சகனாக எனது கருத்து!
– முரளி சீதாராமன்