சோபியாவை அலசிக்கிட்டு…. ’அந்த’ விவகாரத்த சுத்தமா மறைச்சிட்டீங்களே! : கஸ்தூரியின் வருத்தம்!

சோபியா விவகாரத்தை அசலப்போய், அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய வந்த ஐ.எஸ்., பயங்கரவாதி தொடர்பு இளைஞர்கள் விவகாரத்தை பேசவேயில்லையே... என்று வருத்தப் பட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி! 

சோபியா விவகாரத்தை அசலப்போய், அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய வந்த ஐ.எஸ்., பயங்கரவாதி தொடர்பு இளைஞர்கள் விவகாரத்தை பேசவேயில்லையே… என்று வருத்தப் பட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரியின் டிவிட்டர் பதிவைக் கண்டு பலருக்கும் ஆச்சரியம்தான்! காரணம், சோபியா விவகாரத்தில் சற்று அரசல் புரசலாக மென்று முழுங்கி கருத்திட்ட கஸ்தூரி, இந்த விவகாரத்தில் தைரியமாக பதிவிட்டதும், தொடர்ந்து இந்த டிவிட்டர் பதிவுக்கு அவருக்கு வந்து குவிந்த மிரட்டல்களும் அதை அவர் எதிர்கொண்ட விதமும் ஆச்சரியத்தையும் கருத்துச் சுதந்திரத்தின் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றன.

ஒருவர் அவருக்கு விடுத்த கேள்விக்கு பதிலாக கஸ்தூரி வெளியிட்டிக்கும் கருத்து…

போலீஸ் ஆதாரத்துடன் காஷ்மீர் , ISIS தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட 5 முஸ்லீம் இளைஞர்களை பிடித்து உள்ளார்கள். அவர்கள் கொலை செய்ய வந்தோம் என்று விலாவரியாக வாக்குமூலமும் தந்து உள்ளார்கள். சும்மா உங்க மதம் என்ற ஒரே காரணத்துக்காக சமூகவிரோதிகளுக்கு முட்டு கொடுக்காதீர்கள்… – என்பதே!

நடிகை கஸ்தூரியின் டிவிட் இதுதான்….