வானிலைச் செய்திலகூட இவ்ளோ நடிப்பா? செம ‘கலாய்’

இது அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் தான்...! நடிகர்கள் எல்லாம் நிருபர்களாகவும் கதாசிரியர்கள் எல்லாம் செய்தி ஆசிரியர்களாகவும் இருந்தால்தான் காலத்தை ஓட்டமுடியும் போலும்!

அமெரிக்காவில் வாஷிங்க்டனில் அண்மைப் புயல் தொடர்பாக கள நிலவரத்தை நேரலை செய்த வானிலைச் செய்தி டிவி நிருபர் ஒருவர், புயல் தன்னை எங்கோ தூக்கிக் கொண்டு போவது போலவும், தன்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலாத அளவுக்கு காற்று அடிப்பது போலும் ஆக்ட் கொடுத்துக் கொண்டே வானிலைச் செய்தி வழங்கினார்.

ஆனால் அவர் பின்னே இருவர் வெகு இயல்பாக, சாதாரணமாக நடந்து சென்றனர்.

இந்த வீடியோ இப்போது வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி, இந்த டிவி.,யையும் நிருபரையும் காய்ச்சி எடுத்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்.

இயல்பான செய்திக்கே இப்படின்னா… மற்ற செய்திகள்லாம் எப்படி மக்களை சென்றடைகிறது?

இது அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் தான்…! நடிகர்கள் எல்லாம் நிருபர்களாகவும் கதாசிரியர்கள் எல்லாம் செய்தி ஆசிரியர்களாகவும் இருந்தால்தான் காலத்தை ஓட்டமுடியும் போலும்!

மகா நடிப்புடா சாமி…!