சென்னை: எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்., மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைக்கப் பட்டுள்ளது.
கடந்த வருட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பணத்தாள் அற்ற மின்னணு பரிவர்த்தனையை ஊக்கப் படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. மக்களிம் பணமாக கையில் வைத்து செலவழிக்காமல், மின்னணு முறையில் பரிமாற்றத்தின் மூலம் செலவுகளை மேற்கொள்ள ஊக்கப் படுத்தியது.
அப்போது மீண்டும் படிப்படியாக ஏடிஎம்., மில் எடுக்கப் படும் பண உச்சவரம்பும் தளர்த்தப் பட்டது. அதை அடுத்து எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்.மில் ரூ.40 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.20 ஆயிரமாகக் குறைக்கப் பட்டுள்ளது.