நடிகை அமலா பால் கூறியுள்ள பகீர் குற்றச்சாட்டு இன்றைய #மீடூவில் பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சுசி கணேசனிடம் நானும் பல சங்கடங்களைச் சந்தித்திருக்கிறேன் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ள குற்றச்சாட்டும் அதற்கு சுசிகணேசனின் மனைவி மஞ்சரியும் சுசிகணேசனும் செல்போனில் தொடர்பு கொண்டு வார்த்தைகளால் வறுத்தெடுத்து கேலி செய்ததையும் கண்ணீர் மல்க தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு சேய்திருக்கிறார் நடிகை அமலா பால்.
நடிகை அமலாபால் இயக்குநர் சுசி கணேசன் குறித்தும், அவர் மீதான லீனா மணிமேகலையின் பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம், துணை இயக்குநராக அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்குப் புரிகிறது.
சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் நாயகியாக நான் இருந்தாலும், அவரின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன். இந்தக் கொடுமையை, சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லியிருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இன்றைய பொருளாதார நிலையும், பெருகிவரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கெனாதபடி, அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது.
தங்களது மனைவியையும் மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையைச் செலுத்துவது துரதிருஷ்ட வசமானது.
இதுவே இந்தியர்களாகிய நாம், நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மிகத் துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.
ஆன்மிகத் துறையிலும், கலைத் துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதேபோல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் #MeToo குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.
அரசாங்கமும் நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்விதக் கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களைப் போகப் பொருளாகச் சித்திரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும் – என்று கூறியுள்ளார் நடிகை அமலா பால்.
இந்த அறிக்கை தனது சமூக வலைத்தளத்தில் வெளியான பின், மிக மோசமான செல்பேசி உரையாடலை தான் எதிர்கொண்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.
#MeToo #MeTooIndia #LeenaManimekalai #susiganesan pic.twitter.com/Jt2sS685H5
— Amala Paul ⭐️ (@Amala_ams) October 24, 2018
Just got the shock of my life! @DirectorSusi & @sgmanjari called &I picked up to explain the stand.While I was trying to pacify his wife; Susi strted abusing me&to my surprise his wife strted laughing&they both joined to slut shame me. De feel de can scare me with dese tactics ??
— Amala Paul ⭐️ (@Amala_ams) October 24, 2018
WILL THESE ACTRESSES STOP EXHIBITING THEIR VULGAR CURVES IN THE BODIES AND WEAR A DRESS THAT CAN COVER THEIR SECRET BODY ? WILLTHEY STOP RUNNING TO 5 STAR HOTELS FOR NIGHT PARTIES / IF FEMALES SHOW THE VALOPCHOUS BEAUTIES MEN TEND TO LOOSE THEIR CONTROL.